Sunday, December 13, 2009

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்

பெரியார் பேசுகிறார்

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.


1. பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம், நமக்கு நீண்ட நாளாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

தடைக்கற்கள்

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவும், மதம்,சாஸ்திரம்,முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படிச் செய்துவிட்டார்கள். பொதுவாகக் கடவுளைப் புகுத்தியவன், கடவுள் பக்திக்கு முதல் நிபந்தனையாகக் கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஏற்படுத்தினான். கடவும் பஞ்சேந்திரியங்களுக்கு எட்டமுடியாத வஸ்து, அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து, பஞ்சேத்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த அய்ந்துக்கும் கடவுள் எட்டமாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும்.

இந்த இந்திரியங்களை எல்லாம் மீறிச் சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டுக் கடவுளைச் சொன்னான். கடவுள் என்றால் அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும்; எங்கே ஏன் எப்படி என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள். கடவுள் போலவே மதத்தைம் பற்றியும் என்ன என்று சிந்திக்கக்கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது - யாரால் ஏற்பட்டது என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது; சிந்தித்தால் மதம் போய்விடும். எனவே, அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

சாஸ்திரம்

கடவும், மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது; எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றோனோ அவன் நரகத்திற்கும் போவான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள். எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும். நமது இழிநிலை, முட்டாள்தனம் மாறவேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாகப் பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவி விடும்.


நாத்திகம் என்றால்

நமது கொள்கை பகுத்தறிவு - பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும்; அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகமாகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதவர் என்று கூறப்பட்டாலும் - அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கடவுள், நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்திற்கு, ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள். நம்மைத் தவிர்த்த மற்ற உலககிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை. நமது நாட்டுக் கடவுளுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியவை எல்லாமுமே வேண்டும்.

மூடநம்பிக்கை

மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதரில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமாகப் பேதங்களும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும், காரியத்தில் கேடான குணங்களும் கடவுளுக்குக் கற்பித்திருக்கின்றார்கள். இவைகளையெல்லாம் நம்புவது தான் மூடநம்பிக்கை. நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து ஏற்கின்றதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளுவது தான் பகுத்தறிவு

கடவுள் ஏன் ஒழிய வேண்டும்?

நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவிற்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்தும் பார்த்தால் இல்லவே இல்லை. உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

ஒழுங்கான கடவுள் ஏது?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே; சைவ சமயத்தில் கந்தன் - முருகன் - சும்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்கும் போட்டியாக வைணவத்தில் ராமன் என்று ஒரு கடவுள். இப்படியாகப் பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்த கந்தனைப்பற்றிய கதையும் அசிங்கம் - ஆபாசமாக இருக்கும்; ராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக் கேடாக இருக்கும். காரணம் இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை. மக்கள் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவிற்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை, சிந்திக்க ஒட்டாத நிலை.

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.


தந்தை பெரியார் - நூல்:-"உயர் எண்ணங்கள்" பக்கம்:- 3-5

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா


Monday, November 9, 2009

இனி புலம்பெயர் தமிழர் பொறுப்பில் தமிழீழ போராட்டம்- புலிகள்

Tamil ProtesterTamil ProtesterTamil Protester

கொழும்பு: சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ
விடுதலைப் புலிகள் [^],
தமிழீழம்.
09.11.2009

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும்.

காலத்திற்குக் காலம் ஆட்சி பீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை
வன்முறை [^] மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது. ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் விஷயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு
போராட்டம் [^] முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடத்த வேண்டிய பெரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத் தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.

உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே, இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத் தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் சடமையாகிறது.

இவ்வகையில், ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும்.

இந்த வழிமொழிவு இன்று ஈழத் தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதல் கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத் தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.

இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள்
அரசியல் [^] உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Friday, November 6, 2009

உலகத்தில் ஆஸ்திகனே இருக்க முடியாது-ஏன்?எப்படி?எதனால்?



சமதர்மமும் நாஸ்திகமும்


அன்புள்ள தலைவர் அவர்களே, சகோதரர்களே! இன்று திருச்சி மருத்துவகுல சங்கத்தாரால் எனக்குச் செய்த மரியாதைக்கும், வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திற்கும் நான் உண்மையிலேயே அருகனல்லவனானாலும், உங்களுக்கு என்னிடமும், எனது சிறு தொண்டினிடமும், கொள்கையினிடமும் உங்களுக்கு இருக்கும் அன்பும், ஆர்வமும் இம்மாதிரி செய்யும்படி செய்தது என்று கருதிக் கொண்டு அவற்றுக்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைச் சொல்லுகிறேன்.

எனக்கு முன்பு இங்கு பேசிய எனது நண்பர்களும் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதற்கு நான் அவர்களிடம் மிக்க நன்றி காட்டுகிறேன். அன்றியும், நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும், என்னைப் பலர் நாஸ்திகர் என்று சொல்லுகின்றார்கள் என்றும் நான் நாஸ்திகன் அல்லவென்றும், எனக்காக பரிந்து பேசினார்கள். அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆயினும், என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில்தான் நாஸ்திகன் தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.

நாஸ்திகத்திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும், நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகர் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால்தான். நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல; சீர்திருத்தம் .

அதாவது, ஏதாவது பழைய கொள்கைகளை மாற்றவேண்டுமானால், அந்த மாற்றத்தையும் ஏன், எவ்வித சீர்திருத்ததையுமே நாஸ்திகம் என்று தான் யதாபிரியர்கள் சொல்லித் திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது.

கிறித்துவையும், மகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும். துருக்கியில் பாஷாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமே தான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள்.

ஆகவே, நாம் இப்போது எதெதை மாற்ற வேண்டுமென்கின்றோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும், அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவை திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக, மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில் மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாகவோ, அவதாரங்களாகவோ கடவுள் தன்மையாகவோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும், மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லும்போது அப்படிச் சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களைக் கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றார். அதனால்தான் கிறித்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும் மகமதியரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகின்றன.

அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது, ஜாதியையும், தர்மத்தையும் மறுப்பதே ஏன் நாஸ்திகம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஜாதி, உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எஜமான் -அடிமை ஆகியவற்றுக்குக் கடவுளும், தர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதனால், பிறகு மக்களுக்கு விடுதலையும், முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், தர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்? மேடும், பள்ளமும் கடவுள் செயலானால் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால் க்ஷவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் க்ஷவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் க்ஷவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும். ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையே யாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவரும் இருக்க முடியாது. ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமே யாகும். நாஸ்திகமும், சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்யவே முடியாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள தரித்திரம் போக வேண்டுமானால் வெள்ளைக்காரனை வைவது மாத்திரம் போதாது.

நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்துக்கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல. உங்கள் முட்டாள்தனம்தான் காரணம். ஆதலால், நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான் செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக் கூடும். அப்பொழுது கடவுள் செயலையும் அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் ஒருபுறம் ஏழைகள் பட்டினி கிடக்க ஒருபுறம் கோடீஸ்வரராய் கொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டு செல்வத்தை வெள்ளைக்காரன் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள் செயல் என்று தான் சொல்ல வேண்டும். ஆகையால் கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும் கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியதே யாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால், இப்போது அரசர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப் படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற்கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப் பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால் பிராமணன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்ச காலத் திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கின்றது. இனி கொஞ்ச நாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால், பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்ற தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப் போக நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்குப் பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய இப் போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன் வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்-குடையவனுக்குப் பெரும் பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் கோவிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக்கூடங்களும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம். இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளைக்கு அதர்மமாகி தலைகீழாக மாறக் கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால், அதை மாற்ற முற்படுகின்றவன், கடவுள் கட்டளையை மறுக்க ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும்? கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்கமுடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும் மோட்சத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பது உறுதி.

ஏனெனில், அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவற்றில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச காரணங்களாலும் சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவையாகும். ஆகையால்தான் அவ் விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.

--------------------------தந்தை பெரியார் -"குடிஅரசு", 7.9.1930

Friday, October 30, 2009

தமிழ்த்தேசிய அரசியலுக்கான மூன்று பிரதான அரசியல் தளம்.

வரலாறு கொடுத்த வாய்ப்பு பயன்படுத்துவார்களா தமிழர்கள்?

நெருடல்

நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது.

eelamquestionஅமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் “ஜி.எஸ்.பி. பிளஸ்’ சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கு அப்பால் பிரிட்டன் இலங்கைத் தலைவர்கள் பலரின் பிரிட்டனுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. ஜனாதிபதியுடன் ஜப்பான் பயணம் செய்யவிருந்த பலருடைய விசா விண்ணப்பங்களை ஜப்பான் நிராகரித்ததுடன் ஜப்பான் சென்ற பிரதமரையும், அரை மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் தாமதப்படுத்தி கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்து அவமானப்படுத்தியுள்ளது.

இந்திய அழுத்தம்

இந்தியா இவற்றுடன் இணைந்து செயற்படாவிட்டாலும் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு ஆகியன தொடர்பாகக் கடுமையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியப் பிரதமரின் கடிதம் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது ஐ.நா. பயணத்தைக் கைவிட்டு பிரதமரை ஐ.நாவிற்கு அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல தலைவர்களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் அஞ்சியிருக்கலாம். இதற்கு அப்பால் சர்வதேச சக்திகளின் கூட்டு அழுத்தம் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அடுத்தடுத்து இலங்கை வருகின்ற ஐ.நாவின் பிரதிநிதிகள் முன்னரைப்போன்று அல்லாமல் காட்டமான அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை செயற்படாமை

சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது, சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து செயற்பட இலங்கை மறுக்கின்றமையாகும். சர்வதேச சக்திகளிடம் குறிப்பாக மேற்குலக சக்திகளிடம் தமது ஆதிக்கத்தை உலகில் மேலோங்கச் செய்வதற்கு அரசியல், பொருளாதார ரீதியாக சில பொறிமுறைகள் உண்டு. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி, ஊடகச் சுதந்திரம், திறந்த பொருளாதாரம், உதவி வழங்குதல் என்பவையே அப் பொறிமுறைகளாகும். இப் பொறிமுறைகள் உயர்ந்தபட்சம் செயற்படும்போதுதான் தமது ஆதிக்கத்தை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இப்பொறிமுறைகளைப் பின்பற்ற இலங்கை அரசு மறுப்பதுடன், இவ்வழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக மேற்குலகத்தினதும், பிராந்திய சக்தியினதும் எதிர் சக்திகளோடு உறவு கொள்ளவும் அது முயற்சிக்கின்றது. போர்க்காலத்திலும் இந்த உறவினைப் பயன்படுத்தியே மேற்குலக, பிராந்திய சக்திகளின் எதிர்ப்பினை அது தடுத்து வந்தது. தற்போதும் அதன் தொடர்ச்சியையே அது பேண முயற்சிக்கின்றது.

மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் ஆசிய மட்டத்தில் எதிர்நிலையில் உள்ளவை என கருதப்படுபவை, சீனா, ஈரான், மியன்மார் என்பவைதான். இச்சக்திகளின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் வளரக் கூடாது என்பதற்காகத்தான் போர்க் காலத்தின்போது அரசு பக்கத்தில் மேற்குலகச் சக்திகள் நின்றன.

இலங்கைத்தீவு தென்னாசியாவின் கேந்திர மையத்தில் இருப்பதனால் எதிர்நிலை சக்திகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்போது முழு தென்னாசியாவில் மட்டுமல்லாமல் கிழக்காசியா, மேற்காசியா என்பவற்றிலும் மேற்குலகின் ஆதிக்கத்திற்கு அது பாதிப்பைச் செலுத்தும் என்பது அவற்றிற்கு நன்றாகவே தெரியும்.

இத்தகைய கேந்திர அரசியல் நோக்கு காரணமாக முழு இலங்கைத் தீவும் தமக்குத் தேவை என்பதாலேயே தமிழ் மக்களின் தமிழீழ கோரிக்கையை ஆதரிக்க இவை முன்வரவில்லை. எனினும் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இல்லாவிட்டால் அரசினைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதாலும், மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாலுமே போரை நிறுத்த அவை முனைந்தன. ஆனால் இந்திய ஆதரவு கிடைக்காததினால் அது இயலவில்லை.

சர்வதேசக் கூட்டுப் பொறிமுறையின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் முயற்சி

இரண்டாவது காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து சென்றுவிடும் என்ற அச்சமாகும். சர்வதேச சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு கூட்டு பொறிமுறைக் கருவியாக ஐக்கிய நாடுகள் சபையினையே பயன்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இங்கை செயற்படாதபோது அதனைத் தடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து போவது தவிர்க்க முடியாததே. போர்க் காலத்தில் சட்ட திட்டங்களை மறுப்பதற்கு நியாயம் கூறினாலும், போர் இல்லாக் காலத்தில் அதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது நம்பகத்தன்மையை வெகுவாகவே பாதிக்கும். அதுவும் வேறு, வேறு நாடுகளில் வேறு, வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றும்போது கண்டனங்களும், எதிர்ப்புகளும் வருவதற்கு அதிகமாகவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அரசியல் காரணங்களுக்காக சூடான், மியன்மார் விடயங்களில் தீவிரமான போக்கினையும், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கினையும் கடைப்பிடித்து வந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவே. இதனால் பலத்த கண்டனங்களை அது எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் அதன் செயலாளரினதும் நம்பகத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கையாலாகாதவர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஐ.நா. செயலாளருடன் இணைந்து தான் முன்னர் வெளியிட்ட கூட்டறிக்கையை இலங்கையரசு பின்னர் சிறிது கூட கணக்கில் எடுக்காததினால் அவரின் நம்பகத்தன்மை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

சர்வதேச சக்திகள் தமது கூட்டு ஆதிக்கத்தை முன்னர் கூறியமை போல ஐக்கிய நாடுகள் சபையினூடாகவே செயற்படுத்துவதினால், ஐ.நாவின் நம்பகத்தன்மை ஒரு மட்டத்திற்கு மேல் சரிந்து செல்வதை அவற்றால் அனுமதிக்க முடியாது. இதனாலேயே அவசர அவசரமாக பல முனைகளுக்கு ஊடாக அழுத்தங்கள் பீறிட்டுப் பாய்கின்றன.

உண்மைகளைப் படுக்கை விரிப்புக்குள் மறைத்தல், வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக செயற்படுதல் என்பவைதான் சர்வதேச சக்திகளை அதிக கோபத்திற்குள்ளாக்கியிருக்கின்றன. ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டமை, யுனிசெவ் அதிகாரியின் விசா இரத்து செய்யப்பட்டமை, பத்திரிகையாளர் திஸாநாயகத்திற்கு 20 வருட தீர்ப்பு வழங்கப்பட்டமை போன்ற அண்மைக்கால நிகழ்வுகள் சர்வதேச சக்திகளை உசுப்பேற்றி விட்டுள்ளன.

புலிகளின் மீள் எழுச்சிக்கான வாய்ப்புப் பற்றிய அச்சம்

மூன்றாவது தமிழ் மக்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் சிறிதளவாவது முன்னேறாவிட்டால் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அச்சமாகும். புலிகள் திரும்ப மீள எழுவார்களேயானால் நியாயம் அவர்களின் பக்கமே இருக்கும். இது எதிர் நடவடிக்கைகள் எவற்றையும் அவர்கள் மீது எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். அதற்கான தார்மீக உரிமையும் அற்றுப் போயிருக்கும்.

தமிழ் மக்கள் தற்போது புலிகள் இல்லாத வெற்றிட நிலையினை அனுபவ ரீதியாகவே உணர்ந்து வேதனைப்படுகின்றனர். அவர்கள் மீள எழும்புவார்களாக இருந்தால் முன்னரைவிட மிகப்பெரிய ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். புலிகள் தனித்துப் போராடுவதற்குப் பதிலாக உலகத் தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடக் கூடிய சூழல் ஏற்படும். உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும். வெறுமனே தேசிய இனத்தின் போராட்டமாக இல்லாமல் மனித தர்மத்திற்கான போராட்டமாக அது வளர்ச்சியடையும். இவ்வாறான நிலை வருமாக இருந்தால், அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல எவராலுமே இப்போராட்டத்தை தடுக்க முடியாது போகலாம். இவ் எழுச்சி தமிழீழம் நோக்கி நகர்வதையும் தடுக்க முடியாது. இந்தச் சூழல் வருவதை மேற்குலகோ, இந்தியாவோ விரும்பவில்லை.

ஒருபுறம் சீன, பாக். ஆதிக்கம் மறுபுறம் மேற்குலக ஆதிக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது சீனாவினதும், பாகிஸ்தானினதும் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவதை எவ்வாறு தடுப்பதென்பதாகும். சிங்கள சமூகமும், இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை இலங்கை எடுப்பதையே விரும்புகின்றது. சிங்கள சமூகம் என்றைக்குமே இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. இதனால் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையைக் கொண்டு வருவதில் இந்தியா தோல்வியையே தழுவி வருகின்றது.

இத்தோல்வி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியிலிருக்கின்ற எல்லாக் காலங்களிலும், இந்தியாவிற்கு ஏற்படுவது வழமைதான். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு மேற்கின் ஊடுருவலுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு சீனாவின் ஊடுருவலுக்கும் இந்தியா முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குலகத்தின் ஊடுருவலின் போது இந்தியா, இலங்கை அரசிற்கு எதிராக கடுமையான நிலையினையே எடுப்பதுண்டு. இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியையும் அதற்காக உச்ச வகையில் பயன்படுத்துவதற்கு இந்தியா தவறுவதில்லை. சிங்கள சமூகத்திடமும் மேற்குலக எதிர்ப்பு நிலை தீவிரமாக இருப்பதினால் சிங்கள இனவாத சக்திகள் அதற்கு வலிமையான ஆதரவினை வழங்கி நிற்கும். இதனால் இந்தியாவின் செயற்பாடும் இலகுவாகவிடும்.

சலுகைகள் மூலம் சமாளிப்பு

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக் காலத்தில் அதன் சீன, பாகிஸ்தான் சார்பு நிலைக்கு எதிராக இவ்வாறான எதிர்ப்பு நிலையினை எடுக்க முடியாது. சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை சிங்கள இனவாதிகள் ஆதரிப்பதாலும், ஐக்கிய தேசிய கட்சி சீனா, பாகிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்க தயாரில்லாமல் இருப்பதனாலும் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுக்க இந்தியவால் முடிவதில்லை.

இதனால் பல சலுகைகளைக் கொடுத்து இலங்கை ஆட்சியாளர்களை வளைத்துப் போட இந்தியா முயற்சிப்பதுண்டு. இவ்வளைப்பின் மூலம் தனக்கெதிராக செல்லவிடாது அது இலங்கையைத் தடுப்பதுண்டு. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் (1974), கச்சத்தீவு ஒப்பந்தம் (1974) என்பவற்றை இந்த வகையிலேயே அதிக விட்டுக் கொடுப்புகளைக் கொடுத்து அது கைச்சாத் திட்டிருந்தது. இதற்காக மலையக மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுக்கவும் அது தயங்கவில்லை.
இவ்வாறான வரலாற்று நிலையே தற்போதும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. வன்னிப் போரின் போது தமிழ் மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுத்து இலங்கை அரசுடன் இணைந்து போரை அது நடத்தியது. எனினும் சீன ஊடுருவலையோ, தென்னிலங்கை அதிகளவில் சீனா நோக்கிச் சரிவதையோ இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த ஊடுருவல் இந்தியாவின் கைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. மியன்மார் போன்ற நிலைக்கு அது இன்னமும் வராவிட்டாலும் அதனை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவை முடக்கும் முயற்சி

இலங்கை அரசு தென்னிலங்கைக்குள் இந்தியாவைக் கால் பதிக்க விடாமல் வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு வடக்குகிழக்கு மட்டும் போதுமானதாக இல்லை. அதற்கு முழு இலங்கையுமே தேவை. வடக்கு கிழக்கு மட்டும் தேவையாக இருந்திருந்தால், தமிழ் மக்களின் போராட்டத்தை அது ஆதரித்திருக்கும்.

வட கிழக்கில் வலிமையாக கால்பதிப்பதற்கும் தமிழ் மக்களின் ஆதரவும் அதற்கு இல்லை. சம்பூர் பிரதேசத்தை அணு மின் நிலையத்தைச் சாட்டாக வைத்து இந்தியா ஆக்கிரமித்தமை தமிழ் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியாவின் நலன்களுக்காக போரின் போது தமிழ் மக்களின் நலன்களை அது விலையாக கொடுத்தமையையிட்டும், தமிழ் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.

கிழக்கில் புலிகள் கருணா முரண்பாட்டுடன் கால் பதிக்க இந்தியா விரும்பியது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில் இருந்ததினால் பிள்ளையானைத் தனக்குச் சார்பாக பயன்படுத்த முனைந்தது. ஆனால் தற்போது மஹிந்தர் அரசு இதனை விரும்பாததினால் கருணாவை இதற்கு எதிராக இலங்கை திருப்பி விட்டுள்ளது. கருணா அம்பாறை மாவட்டம் முழுவதும் பிள்ளையானுக்கு எதிராக தற்போது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். படையினரும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

உண்மையில் இங்கு பிள்ளையானும், கருணாவும் மோதவில்லை. மாறாக இந்தியாவும், இலங்கையுமே மோதுகின்றன. இந்திய சார்பு சக்திகள் வலிமையுடன் இலங்கையில் இருப்பதனை இலங்கை அரசும் இராணுவமும் அறவே விரும்பவில்லை.

இந்தியா பயன்படுத்த வடக்கில் எவருமில்லை

வடக்கில் இந்தியா பயன்படுத்துவதற்கு எவருமேயில்லை. டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்த முனைந்த போதும் இலங்கையரசுடன் முரண்படக் கூடாது என்பதற்காக அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்கும் வரை தமிழ் மக்களின் மத்தியில் ஒரு தளத்தினை ஒரு போதும் அதனால் அமைக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்காக இந்தியாவை சார்ந்து நின்றாலும் இந்தியாவின் எடுபிடியாகச் செயற்பட அதனால் முடியாது. அதற்குரிய வலிமையும் அதனிடம் கிடையாது. இந்தியாவிற்கு தேவையானபோது ஆயுதம் தரிக்கக் கூடிய அமைப்பே தற்போது அவசியம். அதனாலேயே பிள்ளையானை ஆதரிக்க அது முற்பட்டது. ஆனால் வடக்கில் அதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழகத்தின் நெருக்கடி

அடுத்தது தமிழ் நாட்டிலிருந்து எழும் நெருக்கடியாகும். தமிழ் நாட்டுத் தேர்தல் அரசியல் எப்படித்தான் இருந்தாலும் தமிழக மக்கள் இலங்கை தமிழர்களோடுதான் நிற்கின்றனர். போரில் தமிழ் மக்களின் அழிவும், புலிகளின் தோல்வியும், தமிழக மக்களை வெகுவாகவே பாதித்திருக்கின்றன. தங்களால் இவற்றைப் பாதுகாக்க முடியவில்லையே என அவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றிற்கும் இந்திய அரசே காரணம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புலிகள் மீதிருந்த அதிருப்தி எதுவும் தற்போது தமிழக மக்களுக்குக் கிடையாது. மாறாக அனுதாபமேயுள்ளது. இதனை ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போதும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தியைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருந்தனர். இறுதியில் இதற்கு முகம் கொடுக்க முடியாமல் இரண்டு மணிநேர நேர்காணலை 41 நிமிடத்துடன் முடித்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது.

எனவே தமிழ் நாட்டு அதிருப்தியையும், சமாளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவிற்கு உள்ளது. இல்லையேல் விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழ் நாட்டிலும் ஏற்படலாம் என அது அஞ்சுகின்றது. சிங்கள சக்திகளை பாதுகாக்கச் சென்று தமிழ் நாட்டை இழந்துவிட வேண்டாம் என இந்தியா ஆய்வாளர்கள் இந்தியரசிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

மற்றைய விடயம் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அம்சமாகும். இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காத வரை புலிகள் மீள் எழுவதற்கான வெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். புலிகளின் வெற்றிடத்தை புலிகளிலிருந்து உருவாகும், புதிய புலிகளால் நிரப்ப முடியுமே தவிர ஏனைய அமைப்புகளினால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஏனைய அமைப்புகளின் கையாலாகாத நிலை போர் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. பேரின வாதத்திற்கு எதிராக சிறிய துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் அந்த அமைப்புகள் உள்ளன. புலிகள் வலிமையோடு இருக்கின்ற வரை தனது கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா எவ்வளவோ முயற்சி செய்தும் தனித்துப் போட்டியிட அரசு சம்மதிக்கவில்லை.

புலி எதிர்ப்பு சக்திகள் வாய் பொத்தி மௌனம்

13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்த புலம்பெயர் நாடுகளின் புலி எதிர்ப்பு சக்திகள் இன்று வாய் பொத்தி மௌனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ் நாட்டில் மாநாடு நடத்த முயற்சி செய்தும் இந்திய உளவுப் பிரிவு அதனை இடையில் குழப்பவிட்டது.

புலிகள் வலிமையாக இருந்த போதுதான் புலி எதிர்ப்பு சக்திகள் இலங்கை அரசிற்கு தேவைப்பட்டன. தற்போது அத்தேவை இல்லாததினால் சிறியளவிற்கு கூட இச்சக்திகளுக்கு மதிப்பினை இலங்கை அரசு கொடுப்பதில்லை.

புலிகளின் மீள் எழுச்சி முன்னைய புலிகளைப் போல ஒருபோதும் இருக்காது. சர்வதேச ரீதியாக வலுவான நியாயத்தைக் கொண்ட உலகத் தமிழர்களையும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்த பேரெழுச்சியாகவே அது இருக்கும். இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும் பலம் கொண்டவர்களாகவே அவர்கள் விளங்குவர். இது இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் மட்டுமல்லாமல் மஹிந்தருக்கும் நன்றாகவே தெரியும். இந்திய ஆட்சியாளர்கள், அதுவும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதனை அறவே விரும்பவில்லை.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தினையாவது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்குள்ளது. ஆனால் மஹிந்தர் அரசு அதற்கும் தயாரில்லாமல் இருப்பது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலைத் தருகின்றது.

மொத்தத்தில் தற்போதைய போக்கு தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் போக்காகும். மஹிந்தர் ஆட்சி இலங்கையில் இருக்கும் வரை இப்போக்கு வளர்ந்தே செல்லும். மேலும் சில வருடங்களுக்கு மஹிந்தர் ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. எனவே மேற்குலக இலங்கை முரண்பாடு, இந்திய இலங்கை முரண்பாடு தொடர்ந்தும் வளர்ச்சிடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

வரலாற்று வாய்ப்பு இது!

வரலாறு, சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்கிக் கொடுக்கும். தற்போதும் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழ் மக்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த போகின்றனர்? இதுதான் இன்று எழும் மிகப்பெரிய கேள்வி.

தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் தளம் இன்று மூன்று பிரதான இடங்களில் விரிந்து காணப்படுகின்றது. தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் என்பவையே அம்மூன்றுமாகும். தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், புலம்பெயர் நாடுகளில் புலம்பெயர் மக்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவு சக்திகளுக்கும் இது தொடர்பான மிகப்பெரும் பொறுப்புக்கள் உள்ளன.

இவை மூன்றிலும் தலைமை சக்தியாக இயங்கக் கூடிய தளம் புலம்பெயர் தளம்தான். இதுவே மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து தலைமை கொடுக்கும் தகைமையில் உள்ளது.

புலம்பெயர் மக்கள் தலைமை சக்தியாக இருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய சக்திகள் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தளமாக புலம்பெயர் தளமேயுள்ளது. புலிகளின் தோற்கடிக்கப்படாத பிரிவினரும் அங்குதான் பெருமளவில் உள்ளனர். தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியுமே தவிர, தீவிரமான பணிகளை குறிப்பட்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. இராணுவ நிர்வாகம் அவற்றை அனுமதிக்கப் போதில்லை.

இரண்டாவது தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய மிகப் பிரதான பணி சர்வதேச அரசியலை எமக்குச் சார்பாகத் திருப்புவதுதான். ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இப்பணியினை செய்யாமல், அதில் வெற்றி பெறாமல், எதிர்காலத்தில் ஓர் அடி கூட தமிழ்த்தேசிய அரசியலினால் முன்னோக்கி நகர முடியாது. இப்பணி அதிகளவில் புலைமை சார்ந்த அரசியல் இராஜதந்திரப் பணியாகவும், மக்களை இணைத்து போராட்டங்களை நடத்தும் வெகுஜனப் பணியாகவும் இருப்பதினால் புலம்பெயர் நாடுகளே அதற்கு ஏற்ற தளங்களாக இருக்கின்றன.

புலம்பெயர்ந்த மக்களின் பொறுப்பு

புலம்பெயர் மக்கள் இந்த வரலாற்றுப் பொறுப்பைச் சீராக மேற்கொள்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கூடிய வகையில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்தல் வேண்டும். இராணுவ ரீதியான வெற்றிகளை மட்டும் கேட்டுப் பழகியவர்களுக்கு இந்த அரசியல் வேலைகளின் நுண் தளங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது. இதுவரை கால தியாகங்களை ஒரு சரியான பாதையில் கொண்டு வந்து நிறுத்தி நகர்த்துவதற்கு எங்களது அரசியல் பார்வைகளை விரித்துக் கொள்வது அவசியமானதாகும்.
மாற்று அரசியல் சக்திகளெனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் உப்புச்சப்பற்ற 13ஆவது திருத்தத்திற்குப் பின்னால் நகர்வதை விடுத்து தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து சரியான பாதைக்கு வரத் தவறக் கூடாது. அவ்வாறு தவறுவார்களேயானால் மீண்டும் ஒரு தடவை வரலாறு அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னோக்கி நகரப்பார்க்கும்.

கூட்டமைப்பின் கடமை

தாயகத்தில் தமிழ்த்தேசிய உணர்வை விழிப்புடன் வைத்திருக்க வேண்டியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே ஆவர். அவர்கள் அப்பொறுப்பை உண்மையில் உணர்ந்திருக்கின்றார்களா என்பது சந்தேகம் தான். இல்லையேல் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் ஜனாதிபதியுடன் பேசச் செல்வது, நிவாரணப் பொருட்களுக்கு கையேந்த அடிபடுவது போல ஜனாதிபதியின் கையைப்பற்ற முன்னிற்பது, தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்து விட்ட ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை பக்திப் பரவசத்துடன் பாடுவது எல்லாம் நடந்திருக்காது.

ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் பேச வந்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியென தொழிற்சங்க தலைவர்களின் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்றார். தம்மோடு வலிமையாக மோதிக் கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறி சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளுவதற்கு அரசிற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த எந்தக் கோரிக்கைக்கும் தெளிவான பதில் எதையும் ஜனாதிபதி வழங்கவில்லை. பேச்சு நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அகதி முகாம்களுக்கு அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் காவலில் இருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் கனக ரத்தினத்தையும் விடுவிக்க செய்ய முடியவில்லை.

கூட்டமைப்பின் இயலாமை

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசுவது அவசியம் தான். பேச்சுக்கு ஒரு சாட்சி தேவை என்ற வகையில் வெளி மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும. குறைந்தபட்சம் சரியான நிகழ்ச்சி நிரல்களுடன் ஒரு தொடர் பேச்சுக்குச் சென்றிருக்க வேண்டும். வெறுமனே அரசு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் பேசக் சென்றிருக்க கூடாது.

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக அரசிற்கே நன்மையைக் கொடுத்துள்ளது. அரசும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை பேச்சுக்குச் செல்லவில்லை. அத்தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், தமிழ் மக்கள் தங்களோடு நிற்கின்றனர் என அது பிரசாரம் செய்திருக்கும். அது நடைபெறாததினாலேயே பேச்சுக்குச் சென்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையாவது செய்வதற்கு முன்னர் தமது அந்தஸ்தையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்வது அவசியம். இவ்வளவு காலத் தியாகங்களைப் போட்டுடைக்கும் செயல்களில் அது இறங்கக் கூடாது.

அமைப்பு, தொழிற்பாடு என்பவற்றை பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமானது. விடுதலைக்காக போராடும் மக்களின் ஒரு பகுதிப் பொறுப்பினை ஏற்றிருக்கும் அமைப்பு என்ற வகையில் இவை உச்ச நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சாதாரண அரசியற் கட்சிக்கு இருக்க வேண்டிய பண்புகள் கூட அதனிடம் இருக்கவில்லை. பல்வேறு அமைப்புகளை இணைத்த ஒரு கதம்பக் கூட்டமாகவே அது உள்ளது. அவற்றுடன் இணைந்த அமைப்புகளும் வெறும் பெயர்களுடன் இருக்கின்ற அமைப்புகளே தவிர தம்மளவில் உள்ளார்ந்த வலிமையானவையாக இல்லை.

இக்குறைபாடு அதன் தொழிற்பாடுகளிலும் பாதிப்புச் செலுத்துகின்றது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்று எதுவும் அதனிடன் கிடையாது. அவ்வப்போது கைக்கு வந்தவற்றை மேற்கொள்கின்ற போக்குத்தான் அதனிடம் உள்ளது.

இதனால் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ, வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கச் செல்லும் போதோ, அரசுடன் பேசுவதற்குச் செல்லும் போதோ போதிய ஆயத்தங்களுடன் அது செல்வதில்லை. அதற்கான ஆவணங்களை தேடி தயாரிப்பதுமில்லை. அவற்றை மேற்கொள்வதற்காகத் தங்களுக்குள் ஒழுங்காகக் கூடுவதுமில்லை. அதற்கேற்ற ஒழுங்குவிதிகளும் அதனிடம் கிடையாது. 22 நாடாளுமன்ற உறுப்பனர்கள் இருந்தும் 10 பேரைக் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றாகக் காண முடியாது. அங்கு உரையாற்றும் போது ஏனோ தானோ என்ற வகையில் உரைகள் ஆற்றப்படுகின்றனவே தவிர திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி ஆற்றப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பழைய தமிழரசுக் கட்சிக் காலத்தில் அப்போதைய உறுப்பினர்கள் இதனை நன்றாகவே பயன்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது கேள்வி நேரம் பற்றி சிறிய அக்கறை கூட செலுத்தப்படுவதில்லை.

தமிழ் மக்களின் போராட்டம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்ற கட்டத்திற்குள் சென்ற பின்னர் நாடாளுமன்றக் கட்சிகளிàல் பெரியளவிற்குச் சாதிக்க முடியாது என்பது உண்மைதான். நாடாளுமன்ற அரசியல் என்பதே சமரச அரசியல் அப்பிரிவால் என்பதால், தமிழ்த் தேசியக் அரசியலில் பிரதான பாத்திரத்தை வகிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் சிறந்த துணைப் பாத்திரத்தை அதனால் வகிக்க முடியம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணை பாத்திரத்திற்கு ஏற்ற அமைப்பாகவும் இல்லை என்பது தான் கவலைக்குரியது. இதனை சமாதான காலத்தில் நன்றாகவே அவதானிக்க கூடியதாக இருந்தது.

துணைப் பாத்திரத்தையாவது சரியாக ஆற்றுவார்களா இவர்கள்?

புலிகள் இல்லாத தற்போதைய நிலையில், தமிழ்த்தேசியக் கூடடமைப்பை எப்படியாவது துணைப் பாத்திரத்தை ஆற்றக்கூடியதாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு உடனடியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பன் ஒரு மாநாட்டைக் கூட்டி கட்சியின் இலக்கு, கொள்கை, வேலைத் திட்டம், அமைப்பு வடிவம் என்பவற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்வது அவசியமானதாகும். பழையவர்கள் ஒழுங்காக செயற்படாவிட்டால் புதியவர்களை இணைத்தாவது கட்சியின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது அவசியம். தமிழ் சிவில் சமூகம் விழிப்புடன் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கும் போதே இவை சாத்தியமானவையாக இருக்கும்.

பிரதான பாத்திரத்தைப் புலிகள் அல்லது அதனிடமிருந்து தோற்றம் பெறும் புதுப் புலிகள் தான் ஆற்றமுடியும். ஒரு விடுதலை இயக்கத்தை வெளிப்படையச்செயற்படுத்தும் களம் இலங்கையில் இல்லாததினால், புலம்பெயர் நாடுகளிலேயே ஒரு குறிப்பட்ட காலத்திற்கு அதனை இயக்க வேண்டியுள்ளது. முன்னர் கூறியது போல இன்றைய காலகட்டம் இராணுவச் செயற்பாடுகளை விட அரசியல் ரீதியான இராஜதந்திரச் செயற்பாடுகளை வேண்டிய நிற்பதால், அதற்கேற்றவாறு விடுதலை இயக்கத்தினைப் புனரமைத்துக் கொள்வதும் அவசியமானதாகும்.

அடுத்தது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும். இந்தியா தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செல்வதைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முக்கியமானவையாகும். தமிழக சிவில் சமூகம் இனறு மிகவும் விழிப்புணர்வு நிலையில் இருக்கின்றது. ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போது அதனைத் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கருணாநிதியின் வங்குரோத்துத்தனமான செயற்பாடுகளினால்தான் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியவில்லை. அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிராமல் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அறிவூட்டி அமைப்பாக்கும் போதே அங்கு வினைத்திறன் மிக்க வினைபயன்களை எதிர்பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

தலைமை, தாயகம், தலைமை மூன்று தளங்களில் பொறுப்பு

இவை எல்லாவற்றிற்கும் முதலாவது நிபந்தனை தலைமை அமைப்பை மீண்டும் சீர் செய்வதே. அதனைச் சீர்செய்து தலைமை, தாயகம், தமிழகம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கிணைத்து முன்னேறும் போது காத்திரமான பாய்ச்சலை மேற்கொள்ள முடியும்.

இரண்டாம் கட்ட பணியென்பது திட்டமிட்ட வகையில் இராஜதந்திரப் போரை நடத்துவதே. உலகெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை இணைத்து முன்னேறும் போது இரண்டாம் கட்டப் பணிகளிலும் எம்மால் இலகுவாக முன்னேற முடியும்.