Tuesday, September 1, 2009

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்! பதற வைக்கும் வீடியோ.......

ஒவ்வொரு இனமும் நாகரீகமடைவதில் குடும்ப அமைப்புகளின் பங்கே அதிகம்! எனவே சமூக நாகாரீகத்தின் மிக முக்கியமான் காரணி குடும்பங்களின் முதுகெலும்பான பெண்களே என்கிறது சமூகவியல் குறிப்புகள்! அம்மா பெண் பதிவர்களே! தயவு செய்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் சிங்கள் காட்டுமிராண்டித்தனத்தை தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு, ப்ளாக் படிப்பவர்களுக்கு சொல்லுங்கள்!

இந்தியா : சாயம் வெளுத்துப்போன சனநாயகப் போர்வை!

இந்தியா : சாயம் வெளுத்துப்போன சனநாயகப் போர்வை! - தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்படங்களையும், திரைப்படப் பாடல்களையும் ஒரு போட்டியின் மூலம், முதல் 10 இடங்களை பிடிப்பது எது என்று தர நிர்ணயம் செய்வதை நாம் அறிவோம். சமீபத்தில், சர்வதேச பொருளாதார அறிவுப்பிரிவு ஆராய்ச்சி நிறுவனம், சனநாயக நாடுகள் என்று தங்களை மார்தட்டிகொள்ளும் நாடுகளை அலசி ஆராய்ந்தது. 167 சனநாயக நாடுகளின் சனநாயக தகுதி-குறிப்பாக-பேச்சுரிமை, சமூக பாதுகாப்பு, அரசாங்க ஆட்சிமுறை மற்றும் அரசியல் பண்பாடுகளை உட்புகுந்து அலசியதில், அதிகம் சாயம் போனது இந்தியாவின் சனநாயகப் போர்வையில்தான்!Image

இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயக நாடுகளில் ஒன்று என்று சுயமாக தம்பட்டம் அடித்தபோதிலும், 35 ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது! பூமிப்பந்தில் 30 நாடுகளில் மட்டுமே உண்மையான சனநாயக நாடுகளாக கோடு காட்டுகிறது இந்த ஆய்வு. சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, பிரிட்டன், கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், மொரீசியஸ், தென் கொரியா, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் சனநாயக தகுதி உள்ள நாடுகளாக கோடு காட்டியுள்ளது!

ஒரு காலத்தில் நாஜி முகாம் அமைத்து யூதர்களை சித்திரவதை செய்த ஜெர்மனி சனநாயக நாடாக மாறியதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது! 167 சனநாயக நாடுகளில் போலி சனநாயகம் தழைத்து ஓங்குவதாகவும்-இந்த 50-ல் "பாரத மாதா" இந்தியாவும் அடக்கம்!

பயங்கரவாத ஒழிப்பு என்ற தவறான அட்டவணையை கையில் ஏந்தி, தமிழ் இனத்தடை ஒழிக்க, உலக நாடுகள் "கியூ"-வில் முண்டியடித்து நின்றதை மனித நேயம் மிக்கவர்களும், புத்தி பேதலிக்காத தமிழனும் மறக்க முடியுமா?

"கியூ" வரிசை(!)யில் கடைசி ஆளாகக்கூட நிற்கவேண்டிய அவசியமில்லாத இந்தியா முண்டியடித்துக்கொண்டு, முதல் ஆளாக, சீனாவுக்கு முன்னே வந்து நின்ற அவலத்தை யார் சகிப்பது? மே மாதம் முழுவதும் சாயம் போன சனநாயக போர்வையை முகத்தில் மூடி, முழு வீச்சில், தமிழ் ஈழத்தில், தமிழ் இனத்தை தலை சாய்த்த இந்தியாவின் திருவிளையாடல்களை கணக்கில் சேர்த்து,
மீண்டும் இந்தியாவை சனநாயக பரிசோதனைக்கு உட்படுத்தினால்?....

யார் கண்டது-அனேகமாக இந்தியா சனநாயக நாடுகள் என்ற வரையறைக்குள் வருமா என்பது சந்தேகமே?


- திருத்துறைப்பூண்டியான்

Last update : 28-08-2009 06:08