Saturday, June 20, 2009

'குமுதம் ரிப்போர்டர்' இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை...

சென்னை: சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக 'குமுதம் ரிப்போர்டர்' இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை..

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடுநிலையுடன் இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின.

தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் மண்ணின் மைந்தர்களையே இரும்புக் கால்களால் நசுக்கி தாண்டவம் ஆடியது. அங்கே நசுக்கப்பட்ட மக்களுக்காக பண்டிட் ஜவகர்லால் நேரு குரல் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை இந்திரா குரல் கொடுத்தார். அங்கே இனப் படுகொலைக்கு எதிராக இந்தியா எழுந்து நின்றது.

அமைதி வழியில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற நிலை வந்த போதுதான் சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். அன்னை இந்திராவும் அமரர் எம்.ஜி.ஆரும் இருந்த வரை அவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். கலைஞரும் கரம் கொடுத்தார்.

தனி ஈழம் மலர்ந்தால் இந்தியாவில் தமிழ்நாடும் தனி நாடாகும் என்று சிங்கள அதிபர்கள் காட்டிய பூச்சாண்டியை இந்திரா நம்பவில்லை. ஆனால், அவருக்குப் பின்னே வந்த அவருடைய மைந்தன் ராஜீவ் காந்தி நம்பினார்.

அதன் விளைவாக, ஈழம் பற்றிய இந்திய அரசின் பார்வை திசை மாறியது. போராளிகளை ஒடுக்க இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கியது. ஆனால் சோதனைகளைத்தான் சந்தித்தது. அழைத்த ராணுவத்தை சிங்கள அரசே "சீக்கிரம் வெளியேறு" என்றது.

காரணம், இந்திய ராணுவத்தால் பிரபாகரனைக் கூட பிடிக்க முடியவில்லையே என்று சிங்கள இனவாதம் சீற்றம் கொண்டது. சிங்களம் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே இனம் - ஒரே மதம் என்ற அவர்களுடைய சித்தாந்தம் சிதையத் தொடங்கியது. ஆகவே, அவர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள்.

ஈழ மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கு அவர்கள் கஜானாவைக் காலி செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்தனர். சீனமும், பாகிஸ்தானும் உதவ முன்வந்தன.

கூர்ந்து பார்த்தால் இந்துமாக்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை, -ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனம் தொடர்ந்து முயன்று வருவது தெரியும்.

இந்தியாவிற்கு எதிராக ஒரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது என்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடாகவே இருக்க வேண்டும் என்பது அதன் லட்சியம்.

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் முறையில் சீனத்து எல்லையிலிருந்து அந்த காஷ்மீரத்துக் கானகங்களுக்குள் விரிவான சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இப்போது இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. எனவே, ஈழ மக்களின் நியாயத்தை உணர்ந்தாலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க சிங்கள அரசிற்கு ஆயுத சேவை செய்கிறது.

இந்தியா என்ன செய்கிறது? இலங்கை சீனத்தின் செல்லப்பிள்ளையாகி விடக்கூடாது என்பதற்காக ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க எல்லா வழிகளிலும் உதவி செய்கிறது.

ஈழத் தமிழர்களும் இங்கே தாய்த் தமிழக மக்களும் ரத்த உறவுகள் என்பதனை இந்திய அரசு மறந்துவிட்டது. ஈழம் மயானமானாலும் தொடர் குண்டு வீச்சுக்களால் தமிழ் இனம் அழிந்தாலும் தப்பிப் பிழைத்த அரும்புகளையாவது காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது. அங்கே பனை மரங்கள் கூட பஸ்பமாகி விட்டாலும் அதன் சாம்பலில் பிறக்கும் புதிய ஜீவன்கள் நெருப்பின் புதல்வர்களாக எழுந்து வருவார்கள்.

ஆனால், சிங்கள இனவாதத்திற்கு சீனத்திற்குப் போட்டியாக தாமும் உதவி செய்வதில்தான் இந்திய அரசு துடிப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் சீனத்தின் செல்வாக்கையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இன்றைக்கு இலங்கையில் சீனம் இரண்டு கப்பற்படைத் தளங்களை அமைத்து வருகிறது.

இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது.

இறுதிப் போர் என்று அண்மையில் சிங்கள ராணுவம் ஈழத்தின் மிச்ச மீதங்களைக் கூட பாஸ்பரஸ் குண்டுகளால் எரித்தது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் சீனமும் கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை.

ஐ.நா.மன்றத்தில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவும் சீனமும் சிங்கள அரசிற்குத் துணையாக நின்றன. மனித இனப் படுகொலைகளைக் கண்டிக்க மறுத்தன. அந்தக் கொடுமையை உள்நாட்டுப் பிரச்சினை என்று இரத்தத் திரையிட்டு மறைத்தன.

இன்றைக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது யார்?

நடைமுறையில் சீனம்தானா? அதனால்தான் இந்தியா அநியாயங்களுக்குத் துணை போகிறதா?

நமக்கு அண்மையிலுள்ள மியான்மர் (பர்மா) கடந்த முப்பது ஆண்டுகளாக ராணுவ சர்வாதிகாரத்தின் கோரக்கரங்களில் துடித்துக் கொண்டிருக்கிறது. ராணுவ ஆட்சியைத் தூக்கி எறிய மியான்மரின் இளைய தலைமுறை போராடுகிறது. மியான்மரின் தந்தை அவுங்சானின் புதல்வி சூயிகி பத்தாண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறார்.

இந்திரா காந்தி ஆட்சிக்காலம் வரை மியான்மர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா கரம் உயர்த்தியது. மியான்மர் மாணவர்கள் சுதந்திரமாக டெல்லித் தலைநகரில் தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறி வந்தனர். இந்திய எல்லைக்குள் மியான்மர் மக்களின் விடுதலை இயக்க முகாம்கள் விடிவெள்ளிகளாகப் பூத்திருந்தன.

இந்தியா எந்த ராணுவ ஆட்சியையும் ஆதரித்ததில்லை. ஆனால், காலப்போக்கில் மியான்மரின் ராணுவ ஆட்சியை ஆதரிக்க ஆரம்பித்தோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கிரீடம் சூட்டப்பட்ட இந்தியா, மியான்மர் மக்களின் ஜனநாயகப் போராட்டப் பாதையை அடைத்தது. டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்த விடுதலை கீதம் கெடுதலை ஓலமாகக் கருதப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் ராணுவ ஆட்சியோடு மன்மோகன் சிங் அரசு நேசம் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மர் சீனத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் முடங்கி விடக் கூடாது என்று கருதுகிறது. வெற்றி பெற்றதா? இல்லை.

இன்றைக்கு தென்னிந்தியாவை நோக்கி மியான்மர் தீவில் சீனம் கப்பற் படைத்தளம் அமைத்தே விட்டது.

ஆம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஒரு பக்கம் சீனா ஆதரவு தருகிறது. இன்னொரு பக்கம் இந்தியா தோள் கொடுக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க ராணுவத் தளங்களை எதிர்த்து ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் இன்ன பிற நாடுகள் போராடின. தங்கள் மண்ணில் அத்தகைய தளங்களுக்கு இடமில்லை. ஏனெனில், அணுகுண்டுகள் மீது தலை வைத்துத் தங்களால் தூங்க முடியாது என்று அந்த நாடுகள் அறிவித்தன. அந்த நாடுகளின் போராட்டங்களுக்கு சீனம் ஆதரவு அளித்தது. ஆனால், இன்றைக்கு அதே சீனம் இலங்கையிலும் மியான்மரிலும் தனது கப்பற் படைத்தளங்களை அமைத்து வருகிறது.

இன்றைய சீனத் தலைமையின் போக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு வெடிகுண்டுப் பற்களைக் கட்டிக் கொடுத்ததில் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, சீனத்திற்கும் பங்கு உண்டு.

இலங்கையிலும் மியான்மரிலும் சீனம் செல்வாக்குப் பெறுவது தமது நலன்களுக்கு எதிரானது என்று கருதியே இந்திய அரசு ஈழ இனப் படுகொலையையும் மியான்மர் ராணுவ ஆட்சியையும் ஆதரித்து மவுன சாட்சியாக நிற்கிறது. இதே காரணத்திற்காக இப்போது நேபாள அரசியலையும் இந்தியா குழப்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மன்னராட்சிக்கு முடிவு கட்ட நேபாள மக்கள் பல்லாண்டுகளாக மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினார்கள். அப்போதெல்லாம் ஒரு பக்கம் சீனமும் இன்னொரு பக்கம் இந்தியாவும் மன்னராட்சிக்குத்தான் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.

நேபாளத்திலும் எண்ணற்ற கட்சிகள். இரண்டொன்றைத் தவிர எல்லாமே அரண்மனை வாசலில்தான் பாடம் படித்துக் கொண்டிருந்தன. மாவோயிஸ்டுகள் தலைநகரையும் கைப்பற்றுவர் அரண்மனையையும் மியூசியம் ஆக்குவர் என்ற நிலை வந்த போதுதான் அந்தக் கட்சிகள் புரட்சிக்கு ஆதரவளித்தன. புரட்சியில் மட்டுமல்ல; அடுத்து வந்த தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் மகத்தான வெற்றி பெற்றனர். கூட்டணி அரசு அமைந்தது.

புஷ்பகமல் தகால் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா பிரதமரானார். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தை அவர் செயல்படுத்தத் தொடங்கினார். பிரச்சினைகள் எழுந்தன. மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்த ராணுவத் தளபதியை மாற்ற முயன்றார். அந்தத் தளபதியோ ஏற்கெனவே ஓய்வு பெற்று வீட்டிற்குப் போய் விட்ட ராணுவ அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அதற்காகச் சொல்லப்பட்ட காரணம், ராணுவத்தை பிரசண்டா தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான்.

பிரசண்டா பதவி விலகினார். இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டார். பிரதமராகும் வரை அவரை அங்கீகரிக்காத சீனம் அவரை அங்கீகரித்தது. அதற்காக அவர் சீனத்தின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ஆனால் அப்படிச் சாய்கிறார் என்று இந்தியாவிற்குச் சந்தேகம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவர் பதவி விலகினார். அதனை அவரே பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இனி நேபாளத்திற்கு என்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அரசமைப்பு சபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் தலைவர் சி.பி.கொய்ராலா பிரதமராக வேண்டும். இதுதான் இந்தியாவின் விருப்பம் என்று அண்மையில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதை இங்கே நினைவுகூர வேண்டும்.

அப்படி ஓர் நிலை வந்தால் என்ன நடைபெறும்? மீண்டும் மன்னராட்சி சிம்மாசனம் ஏறும். பெயரளவில் நாடாளுமன்றமும் நகர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்தே ஆட்சி செய்து அனுபவப்பட்டவர்கள்.

பொதுவாக, சீனமும் இந்தியாவும் அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டி போடுகின்றன என்ற கருத்து உருவாகி வருகிறது. அந்தப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள். மியான்மரே ராணுவ முகாமாக உருமாறி இருக்கிறது. நேபாளத்தில் வாக்குப்பெட்டி மூலமே 40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சரித்திரத்தின் மீது ரத்தத் துளிகளைத் தெளிக்கிறார்கள். பார்ப்போம்.

Friday, June 19, 2009

இவர்களெல்லாம் உயர்கல்வி படிக்க வந்துவிட்டால்...........


ஆஸ்திரேலியா: நிறவெறியால் ஒடுக்கப்படும் ஆதிக்க சாதியினர்
முருகசிவகுமார்

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அங்கு விக்டோரியா மாகாணத்தில் தங்கி படித்துவரும் இந்திய மாணவர்கள் மீது அந்நாட்டு மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரவன் குமார் என்ற மாணவர் உள்பட 4 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட இடம் ஓர் விருந்து நடைபெற்ற இடம்.

Indian studentsஅங்கு ஸ்குரூடிரைவரால் குத்தப்பட்ட குமார் என்ற மாணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இராஜேஷ் குமார் என்ற மாணவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பல்விந்தர் சிங் என்ற மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். நிறவெறி காரணமாக இந்த தாக்குதல்கள் நடந்ததாக இந்திய மாணவர்கள் சார்பில் கூறப்படுகிறது.

அப்படியானால், இந்தியாவில் தங்களை உயர்ந்தவர்களாக கற்பிதம் கொண்டுள்ள பார்ப்பன, பனியா, சாதி இந்து மாணவர்கள், ஆஸ்திரேலியர்கள் பார்வையில் கறுப்பர்கள். அதாவது, தாழ்ந்தவர்கள் - தீண்டத்தகாதவர்கள் - தங்களைவிட கீழானவர்கள்.

மேட்டுக் குடியினர் மீதான இத்தாக்குதல் குறித்து அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் ஆகிய இருவரும் பதற்றமடைந்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், கீழ் நிலை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு விரைவில் பேசியிருப்பார்களா என்று சின்னபுள்ளதனமா கேட்காதீங்க. தமிழக சமூக படிநிலையில் அடித்தளத்தில் இருக்கிற மீனவர்களில் 400 க்கும் மேற்பட்டவர்களை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் உயர் பதவியில் இருந்தும் இந்தியப் பிரதமரோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், பேசிய கெவின் "ஆஸ்திரேலியாவில் இருக்கும் 90,000க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் எங்கள் நாட்டின் விருந்தினர்கள்" என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அறிவுகெட்டத்தனமானது" என்று கூறி வருத்தமும், கண்டனமும் தெரிவித்தார்.

Indian house"ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து வேதனை அடைந்தேன். ஆஸ்திரேலியாவில் நடந்த நிறவெறித் தாக்குதல் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கம்" என்று பா.ஜ. தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க கோரியும் கடந்த ஒன்றாம் தேதி அன்று ஆஸ்திரேலியா வாழ் இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர்கள் சங்கம் ஆகியவை சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. மெல்போர்ன் நகரில் ஷரவன் குமார் சிகிச்சை பெற்று வரும் மெல்போர்ன் ராயல் மருத்துவமனை முன்பு தொடங்கி இந்திய மாணவர்கள் சம்மேளன தலைவர் குப்தா தலைமையில் விக்டோரியா நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, “நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும். பாரத மாதா வாழ்க’’ என்று முழக்கமிட்டபடி சென்றனர்.

சரி, இதையெல்லாம் யாவரும் அறிந்திருப்பீர்கள். ஆயினும் இது குறித்து நான் எழுதுவதற்கான காரணம், "நிறவெறியால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்கள்" என்ற சொற்கள் என்னை இந்தியாவில் நடந்துவரும் பல நிகழ்வுகளை யோசித்து பார்க்க வைக்கிறது.

தாக்குதலுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட இந்திய மாணவர்களை நிழற்படத்தில் பாருங்கள்.
இவர்கள் எல்லோரும் வெள்ளைத் தோல் மனிதர்கள். இன்னும் நல்ல சொற்களில் சொல்ல வேண்டுமானால், இங்கு தங்களை உயர்வாக கருதும் மேட்டுக்குடிகள். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை இந்த மேட்டுக்குடிகள் என்ன செய்கிறார்களோ, அது இப்போது நடக்கிறது. (அதற்காக மாணவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். மனித உரிமை என்ற வகையில் நிச்சயமாக கண்டிக்கத் தக்கது.)

இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தபோது, "இவர்களெல்லாம் உயர்கல்வி படிக்க வந்துவிட்டால், நாங்கள் தெரு பெருக்க போக வேண்டும்" என்று கூறி இந்த மேட்டுக்குடிகளும் இவர்களின் உறவுகளும்... துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டங்களில் துளியளவும் நியாயம் இல்லையென்றாலும், இதனை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இந்த சாதிய மனநிலை மாற்றம் பெறாமலே பல மட்டங்களில் தொடர்கிறது.

காலம் காலமாக மேட்டுக்குடிகளின் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், சாதி ரீதியாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

தெருவில் நடந்தால் தீட்டு, பொது கிணற்றை பயன்படுத்த தடை, தலித் இனத்தை சேர்ந்தவர் படித்து உயந்த பதவியில் இருந்தாலும் கீழானவர்தான். ஆடு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் புழங்கும் இடங்களை கூட தலித் மக்கள் பயன்படுத்த எதிர்ப்பு, சமூக நீதி கொள்கையில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை ‘சலுகைகள்’ என்று தவறாக நினைத்து கொண்டு அதனை கேவலப்படுத்தி முழுப்பயன் கிடைக்காமல் செய்யும் சாதி இந்து அதிகாரிகள். குறிப்பாக ஒரு அடித்தள சமூகம் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கில் அரசால் உருவாக்கப்பட்ட விடுதி என்னும் அமைப்பு சரியாக இயங்காமல் அலட்சியத்தால் முட்டுக்கட்டை போடும் உயர்சாதி அதிகாரிகள். சாதி இந்துக்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து பேசினால், மலம் தின்ன வைப்பது, வாயில் சிறுநீர் கழிப்பது. தலித் பெண்தானே என்ற கேடு கேட்ட எண்ணத்தால் வல்லுறவுக்கு ஆட்படுத்துதல். இத்தகைய சாதி கொடுமைகள், நிறவெறியை விட கொடுமையானவை.

Studentsஇப்போது, நிறவெறியால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக சிலர் எண்ணலாம். இல்லவே இல்லை. ஐரோப்பிய வெள்ளை இனத்தால் கொடுமைக்கு ஆளான ஆப்பிரிக்க மக்களில் துன்பம் , அடிமை வாழ்வு மிகக் கொடியது. ஆனாலும், நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்று கூக்குரலிடும் இந்திய பார்ப்பனர்களின் வாழ்வையும் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் வாழ்வையும் ஒரு அளவுகோளில் வைக்க முடியாது; கூடாது. அவ்வாறு ஒருநிலையில் வைத்து பேசினால் அதைவிட முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

நிறவெறியால் பாதிக்கப்பட்ட அந்த மேட்டுக்குடிகள்தான், இந்தியாவில் இத்தகைய சாதி தொடருவதற்கு காரணமானவர்கள். வெள்ளை இனத்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறென்று கூக்குரலிடும் இவர்களும் இவர்களின் உறவினர்களும் இந்திய ஒடுக்கப்பட்டவர்கள் மீது நடத்திவரும் அல்லது நடந்து வரும் தாக்குதல்களும் தவறென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய சாதிவெறி கொண்ட இவர்கள் இனியாவது மனம் திருந்த வேண்டும். இன்னும் ஒருபடி போய்கூட முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக ஒடுக்கப்பட்டவர்கள் முன் மன்னிப்பும் கேட்க வேண்டும்.

"நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று பேரணியில் முழக்கமிட்ட இந்த மேட்டுக்குடிகள் - சாதியை பேணுபவர்கள், இந்திய தலித் மக்களுக்கும் நியதி கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுவதை கைவிட வேண்டும்.

உயர்வு - தாழ்வு, கருப்பு - வெள்ளை, இனம், பால் போன்றவற்றில் வேறுபாடு பார்த்து ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மககளை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி துன்பத்தை கொடுக்கும் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். மனித உரிமைக்கு பங்கம் விளையும்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று நியாயம் கிடைக்க போராட வேண்டியது நல்ல மனிதர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தனக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் போன்றதுதான் பிறருக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் என்று மனதார உணர வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நிறவெறியால் பாதிக்கப்பட்ட இவர்கள், நிறவெறி போன்றதே சாதிவெறியும் மத வெறியும் என்பதை உணர்ந்து சாதி - மதம் அற்ற சமூகத்தை உருவாக முனைய வேண்டும். நிறவெறியால் பாதிக்கப்பட்டபோது துடித்து கண்டித்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இந்தியாவில் சாதிவெறி தாக்குதல் நடக்கும்போது கண்டிக்க வேண்டும் அல்லது சாதிவெறி இல்லாமல் தடுக்க வேண்டும்.இதுவே என் எண்ணம்; சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

-
முருகசிவகுமார் murugasivakumar@gmail.com

"பெரியாரியம்''

டிசம்பர் 2008

திராவிடத்தால் விழித்தோம்...
லலிதா

புதிய பெண்ணியம் செப் அக்டோபர் இதழில் மதி இடம் கேளுங்கள் பகுதியில் "திராவிடம் மாயையா?' என்றதொரு கேள்விக்குப் பதிலாக, அழுத்தமான பதில் ஒன்றை மிகச் suருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். பெரியார் உருவாக்கிய அல்லது பெரியாரால் உள்வாங்கப்பட்ட திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை விமர்சிப்பது என்பது வேறு, அக்கருத்தியலையே புறக்கணித்து, பெரியாரைப் பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வது வேறு என்ற தொனியிலேயே அந்த பதில் அமைந்திருந்தது.

periyarமிகச் சுருக்கமாக சொல்லப்பட்ட அந்தக் கருத்து சில பெரியாரியவாதிகளால் பாராட்டுப் பெற்றதோடு, சில மார்க்சியவாதிகளால் தொலைபேசி வழியே விமர்சிக்கவும் பட்டது. பெண்ணியம் இதழின் கருத்துக்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த அக்கரை கொண்டுள்ள தோழர் ஒருவர் சில கருத்துக்களைச் சொன்னதுடன் "பெரியாரையே "வந்தேறி' என்று கூறிக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றிருப்பது தெரியுமா' என்றொரு வினாவினை எழுப்பினார். இந்தக் கேள்வி நம்முள் ஒரு சிறு அதிர்வினை ஏற்படுத்தியதோடு "மதியின் பதிலில்' இத்தனை செய்திகள் பொதிந்து கிடக்கின்றனவா என்ற வியப்பினையும் உண்டு பண்ணியது. கூடவே "பெரியாரின் அரசியலையும்' சிறியதோர் ஆலிவுக்குட்படுத்தினால் இன்னும் நிறையத் தகவல்கள் தெரிய வருமோ என்ற ஆர்வத்தையும் கிளப்பியது.

பல நூற்றாண்டுகளாக இன, மொழி உணர்வு அருகிக் கிடந்த அல்லது அற்றுப்போயிருந்த நிலையில் மிகப் பெரும் மக்கள் திரளை, மொழி உணர்வை ஊட்டி ஒன்று திரட்டிய பெருமைக்குரியது திராவிட இயக்கம் தான் என்பதே நமது கண்ஃணாட்டமாக இருந்து வருகிறது. அது காறும் மத ரீதியாகவும், மதிய நோக்கிலும் திரட்டப்படும் வெகுமக்கள் கூட்டத்தைத்தான் உலகம் கண்டிருந்தது. ஆனால் தமிழின் வழியே சிதறிக் கிடந்த தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் ”யமரியாதையினை ஏற்படுத்தி, பன்னூறு ஆண்டு காலமாக அவர்கள் இழந்திருந்த அடையாளத்தை மீட்டுத் தந்தது திராவிடக் கருத்தாக்கமே என்பதும் நமது ஆழமான நம்பிக்கை.

இம்மாபெரும் மதனையை நிகழ்த்த, முன்னுதாரணமே இல்லாத அவர்களின் முழுமையான முயற்சிகளே காரணம் என்பதும் இந்த ஆலிவின் வழியே தெரிய வந்தது. ஊர் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் எனும் மேடைப்பேச்” தொடங்கி பலதரப்பட்ட இதழ்கள், நாடகங்கள், திரைப்படங்கள், இலக்கியம் என அனைத்து வடிவங்களிலும் போராடி வென்று தமிழருக்கு முகவரி கொடுத்தது திராவிட இயக்கம் தான். இதனை எவரேனும் மறுப்பர் எனில் அவர்களை வரலாறு அறியாதவர்கள் என்றே மதிப்பிட வேண்டியதாக இருக்கும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியர்களின் நலம் காக்கத் துவங்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதோரான நீதிக்கட்சி (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) யும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் ஒன்றிணைந்து தான் 1944ம் ஆண்டில் திராவிடர் கழகமாக உருமாற்றம் பெற்றது. 1912ம் ஆண்டிலேயே மருத்துவர் சி.நடேசன் என்பாரால் "சென்னை மாகாண திராவிடர் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. பின்னரே அது 1916ல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக மாறியது. அக்காலச் சூழலில் மூன்று விழுக்காடே இருந்த பார்ப்பனர் தொண்ணூற்றியேழு விழுக்காட்டு மக்களைத் தங்கள் வசம் இருந்த அரசுப் பதவிகளின் வழியே அடக்கியாண்டனர். மெத்தப்படித்திருந்தும், வசதி வாலிப்பிருந்தும் அரசுப் பதவிகளை அடையமுடியாத பார்ப்பனரல்லாத முற்பட்ட வகுப்பினரே இந்நிலையை மாற்றிட நீதிக்கட்சி எனும் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடங்கினர்.

1920ஆம் ஆண்டு தொடங்கி 1934 முடிய பரந்துபட்ட சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சியே நடந்து வந்திருக்கிறது. ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சி நடத்திய நீதிக்கட்சியில் ஆறு முறை தெலுங்கர்களே தலைமை அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். ஒரே ஒரு முறை மட்டும் தமிழர் (பி.சுப்பராயன்) தலைமை அமைச்சர் பொறுப்பு வகித்திருக்கிறார். தமிழர் அல்லாதோரே நீதிக்கட்சியில் முன்னிலை வகித்து வந்தனர் என்ற நிலையாலும், பார்ப்பனர்க்கு எதிராகப் அரசுப் பதவிகளைப் பிடிப்பதொன்றையே நோக்கமாகக் கொண்டிருந்ததாலும், நீதிக்கட்சியின் குறிக்கோளற்ற பயணம் இடையிலேயே நிலை தடுமாறியதுடன் கட்சி உடைந்து சிதறியது.

1922ம் ஆண்டு தமிழக காங்கிரசு தலைவராக இருந்த பெரியார், மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே பார்ப்பன ஆதிக்கம் மிகுந்த அக்கட்சியுடன் முரண்பட்டு வெளியில் வந்தார். 1926ம் ஆண்டு ”யமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, இயக்கப் பரப்புரைக்கென குடியரசு, விடுதலை போன்ற பல்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்தி வந்தார். இதனால் தமிழ்நாட்டில் சிந்தனையாளர்கள் கூட்டம் பெருகியது. தமிழகத்தின் வாசிப்புத் தளம் விரிந்து பரந்தது. தமிழ் மொழி புத்துயிர் பெற்று, தமிழர்களை இன உணர்வோடு ஒன்றிணைக்கும் வல்லமை படைத்ததாக மாறியது.

சென்னை மாகாணத்தில் மதிப்பிரிவுகளாலி பிரிந்து கிடந்த திராவிடச் சங்கங்களான பறையர் மகாசபை, நாடார் ஜன சங்கம், நாயுடுகள் சங்கம், விசுவகர்மா ஜனசங்கம், வன்னியகுல சத்திரிய சங்கம், வேளாளர் சங்கம் என்கிற அனைத்து அமைப்புக்களையும் ஒருங்கிணைப்பதொன்றே சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகவும் இருந்தது. இதில் பெரியார் ஓரளவு வெற்றியும் பெற்றார். பின்னாளில் நீதிக்கட்சி சிதறியபோது அரசுப்பதவி வேண்டாதோர் என்போர் பெரியாரின் தலைமையை ஏற்றனர்.

1938ம் ஆண்டு இராஜாஜி அமைச்சரவை இந்தியைப் புகுத்திய போது பெரியார் வெகுண்டெழுந்தார். "தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். இம்முழக்கத்தை தமிழர் ஒவ்வொருவரும் கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்றதோடு வீடுகளில் கல்வெட்டாலிப் பதித்து வைக்கவும் வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆண்டில் தான் மொழிப் போரில் பங்கேற்ற பெண்கள், மகளிர் மாநாடு ஒன்றினை நடத்தி "பெரியார்' என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினர்.

தந்தை பெரியாரின் தலைமையில் கீழ் இருந்த இயக்கத்தில் தெலுங்கு, கன்னட, மலையாள இனத்தவரும் பெருமளவில் இருந்தனர். 1939ம் ஆண்டு இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில் பெரியார் திராவிட நாட்டுக் கோரிக்கையினை மீண்டும் பற்றிக் கொண்டார். திராவிடச் சங்கங்களுக்குத் தலைவர் என்ற முறையிலும், தாமே ஒரு தமிழர் அல்ல (தாயார் தெலுங்கு நாயக்கர், தந்தை கன்னட நாயக்கர்) என்ற நிலையிலும், தென்னிந்தியப் பகுதி திராவிடம் என்றழைக்கப்பட்டதாலும் இக் கோரிக்கையில் பெரியார் பிடிவாதமாக இருந்தார்.

1940ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இலண்டனில் "இந்திய விவகார ஆலோசனைக் குழு' வின் கூட்டத்தைக் கூட்டியது. இந்தியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் நோக்கத்துடன் அக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தந்தை பெரியார் திராவிடநாடு பிரிவினைத் திட்ட அறிக்கையினைத் தயாரித்து அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர் செல்வம் என்பவரிடம் கொடுத்து ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவரை அனுப்பி வைத்தார். ஆனால் எதிர்பாராவிதமாக லண்டன் சென்ற விமானம் 1940, மார்ச் ஒன்றாம் தேதியன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பன்னீர் செல்வம் மறைந்தார். இதனால் திராவிட நாட்டுக் கோரிக்கை மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது.

இதன் பின்னர் சென்னை மாகாண அரசியல் சூழல் காரணமாக ”யமரியாதை இயக்கத்தை "தமிழர் கழகம்' என்னும் பெயர் மாற்றம் செய்யும் முடிவோடு சேலத்தில் மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இயக்கத்தில் இருந்த முன்னணித்தலைவர்களான பிற திராவிட இனத்தவர் "தமிழர் கழகம்' எனப் பெயர் சூட்டினால் தாங்கள் வெளியேற நேரிடும் என்று எச்சரித்தனர். தந்தை பெரியாரும் நிலவிய சூழலை ஆலிந்தறிந்து திராவிடர் என்ற பொதுப் பெயராகவே இருக்கட்டும் என்று முடிவு செய்து "திராவிடர் கழகம்' என அறிவித்தார். எனினும் 1953ம் ஆண்டு ஆந்திரா பிரிந்து தனி மாநிலமானது போன்று 1956ல் கர்நாடகா, கேரளா, மாநிலங்கள் உருவான பிறகு பெரியார் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டார்.

1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் நாள் "விடுதலை' தலையங்கத்தில் பெரியார் இவ்வாறு எழுதினார் "நான்கும் சேர்ந்து ஒரு நாடாக இருந்த போது அவர்களையும் சேர்த்துக்கொண்டு பிரிவினை கேட்க வேண்டி இருந்தது. இப்போது அவனவன் தனியே பிரிந்து போன நிலையில் அவ்வாறு கேட்க என்ன தேவை இருக்கிறது?' இவ்வாறு எழுதிய பெரியார் இனி தமிழ்நாட்டின் விடுதலைக்கே பாடுபடுவது என்று அப்போதே முடிவு செய்தார். அவரிடமிருந்து 1949ம் ஆண்டு பிரிந்த அண்ணாவும் திராவிடத்தைப் பேசினாலும், திராவிட நாட்டைக் கோரினாலும், திராவிட நாட்டில் மூன்று மொழிகள் சேர்ந்த கூட்டாட்சியே நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தற்போது மாயை என்று சொல்லப்படும் திராவிடம் என்கிற சொல்லும், கருத்தும் பெரியாரால் உருப்பெறவில்லை என்பதும் நமது ஆலிவில் கிடைத்த முக்கியச் செய்தியாக இருக்கிறது. 1912ம் அண்டிற்கு முன்பே பவுத்த சமய அறிஞராகக் கருதப்பட்ட அயோத்தி தாசப் பண்டிதர் 1892ம் ஆண்டு நீலகிரியில் "ஆதி திராவிட மகாஜனசபா' என்கிற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இதுதான் முதலாவது திராவிட அமைப்பு என்றும் அறியப்படுகிறது. இவர் 1907ம் ஆண்டு தொடங்கி ஏழு ஆண்டுகள் முடிய "ஒரு பைமத் தமிழன்' என்ற இதழை நடத்தி வந்த போதும் தம்மை திராவிடர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். அது மட்டுமின்றி தமிழ் மொழியை உருவாக்கியவரே புத்தர் தான் என்பதான கருத்துக்கும் ஆட்பட்டிருந்தார்.

உலகின் தலைசிறந்த வரலாற்று ஆலிவாளர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்தைச் மர்ந்த டாக்டர் ஆனந்த குமாரமமி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் என்போர் இந்தியா முழுவதும் சிறு சிறு குழுவினராகப் பரவி இருந்தனர் என்று தம் ஆலிவு நூலில் குறிப்பிடுகிறார். ஆரியர் வடநாட்டார், திராவிடர் தென்னாட்டார். ஆரியர் இவர்களைத் தாஸ்யூ, தாசர் என்றெல்லாம் அழைத்து வந்ததோடு, எப்போதும் இவர்களுடன் முரண்பட்டே வந்துள்ளனர். ஆரியர் இவர்களை அனாஸர் (மூக்கற்றவர்கள்) என்றழைத்ததற்கும் நிறைய வரலாற்றுச் மன்றுகள் உள்ளதெனக் கூறுகின்றார்.

ஆங்கிலேயரான கால்டுவெல் என்னும் மொழி அறிஞர் ஆரியர்கள் தமிழர் என்று சரியாக உச்சரிக்கத் தெரியாததால் "திரமிள', திராவிட என்று அழைத்ததே பிற்காலத்தில் திராவிடம் எனும் சமஸ்கிருதப் பெயர் ஆயிற்று என்கிறார். கி.பி.470ம் ஆண்டிலேயே வச்சிர நந்தி என்னும சமண முனிவர் மதுரையில் "திரமிள சங்கம்' என்ற அமைப்பினைத் துவங்கியதாக "தமிழ் நாடு வரலாற்றில்' ஒரு செய்தி உள்ளது. கி.பி.8ம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் என்பவரால் ஆந்திரதிராவிட பாஷா என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் கால்டுவெல் ”ட்டிக் காட்டுகிறார். இவ்வாறு திராவிட பாஷா என்று அழைக்கப்பட்டது தமிஃழ என்பதும் தெளிவு.

தேசிய இனங்களின் வரையறைக்கு மொழி முக்கிய காரணி என்பது வலுவாக, பரவலாக அறியப்படாத சூழலில் பெரியார் திராவிட நாட்டுக் கோரிக்கையினை வைத்ததை தவறு எனக் கொள்ள எவ்வித முகாந்திரமும் இல்லை. அவரே தமிழர் அல்ல என்கிற சூழலில், அக்கால அரசியல் மற்றும் வளர்ச்சியற்ற சமூகப் பின்னணியில் இது போன்ற திராவிடக் கோரிக்கையினை முன்வைப்பதே நியாயமாகவும், பொருத்தமாகவும் இருந்திருக்கும். மொழி வாரி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு தமிழ்ச்சமூக மாற்றத்திற்கென்றே தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் தந்தை பெரியார் என்பதும் எவரும் அறியாததல்ல.

உலகில் வேறெந்தவொரு தலைவரும் நிகழ்த்தி இராத மாபெரும் மதனையாக பெரியார், தமிழ்நாட்டில் 10,700 பொதுக்கூட்டங்களில் தமது பகுத்தறிவுப் பிரச்மரத்தை நடத்தி இருக்கிறார். அவர் இதற்காகப் பயணம் செய்த தூரம் என்பது நம்மை மிகவும் மலைக்க வைக்கக் கூடியது. இந்த பூமிப் பந்தை பத்து முறை ”ற்றி வந்தால் எத்தனை லட்சம் மைல்கள் கணக்கிடப்படுமோ, அவ்வளவு தொலைவிற்குத் தமது கொள்கைப் பரப்புப் பயணத்திற்கென தமிழ்நாட்டில் ”ற்றுப்பயணம் மேற்கொண்டவர் தந்தை பெரியார்.

தமிழர் தலைவரான தந்தை பெரியாரை "வந்தேறி' என்று குறிப்பிடுவோர், அவ்வாறு கூறக் காரணம் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்பது தான். காஞ்சி சங்கராச்மரியார் கூறிய தமிழ் நீச பாஷை என்பதையும் இதற்குத் துணையாக அழைத்து கொண்டு, இருவருமே தமிழர்கள் அல்ல. வந்தேறிகள் தான், எனவே தான் தமிழைப் பழிக்கின்றனர் என்பதாக இவர்கள் கருதுகின்றனர். இவ்விரு கூற்றுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய இடைவெளியினையும் காணத் தவறுகின்றனர்.

ஓர் அன்னை தன் குழந்தையின் பசியாற்ற முனையும் போது, உண்ண மறுத்து அடம் பிடிக்கும் குழந்தையினை மிகக் கடுமையான வார்த்தையில் ""சனியனே... எக்கேடும் கெட்டுப் போ...'' என்று கூறுவதற்கும், அதே குழந்தை அடுத்த வீட்டில் சென்று விளையாடும் போது, அது பிடிக்காத அவ்வீட்டுப் பெண் ""சனியனே.... போலித் தொலை'' என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளதோ அதே வேறுபாடு தான் இவை இரண்டிற்கும் இடையில் உள்ளது. தமிழருக்கு முகவரி கொடுத்த தந்தை பெரியாருக்குத் தமிழரைத் திட்ட உரிமை இல்லை எனில் தமிழகத்தில் பிறந்த எந்தத் தமிழனுக்கும் அந்த உரிமை இல்லாமலேயே போலிவிடும். கூடவே அன்னையை அந்நியராக்கிப் பார்க்கும் அறியாமையும் வெளிப்பட்டு விடும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் வேங்கடம் முதல் குமரி வரை தமிழகம் பரவி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து வந்த சங்க இலக்கியம் சேர, மேழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பற்றிப் பேசிப் புகழாரம் சூட்டுகிறது. பண்டைத் தமிழ் நூல்கள் பறைமற்றும் தமிழர் பெருமை கி.பி.1050 களிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது என்பதையும் வரலாறு நமக்குச் ”ட்டிக் காட்டுகிறது.

பதினோராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே தமிழ் மூவேந்தரின் ஆட்சி முடிவுக்கு வந்து விடுகிறது. சோழ நாட்டை முதலில் கைப்பற்றியது முதலாம் குலோத்துங்கன் என்னும் கீழைச் மளுக்கியனே. இவன் கன்னடத் தெலுங்கன் என்றே வரலாறு கூறுகிறது. பாண்டிய நாட்டிலோ விசயநகரப் பேரரசின் ஆட்சி நாயக்கர் ஆட்சியாக மலர்ந்தது. நாயக்கர்களில் பெரும்பாலோர் முதலில் கன்னடர்களாக இருந்தாலும் பின்னாளில் தெலுங்கர்கள் கையில் பாண்டியப் பேரரசு சென்றது. இவர்களே தமிழ் மன்னர்களது ஆட்சி முறையினை மாற்றி "பாளையப் பட்டுகள்' எனும் குறுநில ஆட்சி முறையினை ஏற்படுத்தினர்.

சோழரின் தலைநகராக இருந்த தஞ்சாவூரோ மராட்டியரின் ஆளுகைக்குள் அடங்கியது. திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் நீலமலைப் பகுதிகளில் படுகர் எனப்படும் கன்னடர் பெருமளவில் வந்து குடியேறினர். பாளையக்காரரான பாஞ்மலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கு குறுநில மன்னனே. தென்பாண்டி நாடும் இதுபோன்ற பாளையத்துக்காரர்களால் இராசபாளையமாகவும் மாறியது.

இவ்வாறு பண்டைத் தமிழ் நூல்களால் புகழப்பெற்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழக மன்னர்களின் ஒற்றுமையின்மையினால் மொழி உணர்வை இழந்து, இனப்பெருமை இழிந்த நிலையில் சிதிலப்பட்டு அந்நியர் வசம் சென்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது தனித்தன்மையை இழந்து விட்ட தமிழகம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு, பதினேழாம் நூற்றாண்டில் நிர்வாக வசதிக்காக சென்னை மாகாணமாக உருப்பெற்றது. இந்தச் சென்னை மாகாண நிலப்பரப்பில் தமிழினம் மட்டுமின்றி திராவிட மொழிகளின் இனத்தாரும் ஒட்டு மொத்தமாக இரண்டறக் கலந்திருந்தனர். ஆரியர் தமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் தென்னிந்தியாவை திராவிடப்பகுதி என்று குறிப்பிட்டிருந்ததை, ஏறக்குறைய முன்னூறு ஆண்டு கால ஆங்கிலேயரின் ஆட்சி உறுதி செய்தது. தென்னிந்தியப் பகுதி திராவிட நாடு என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவின் இத்தகைய சமூக அரசியல் சூழலில், இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தில் பகுத்தறிவுப் பகலவனாலி உதித்தார் தந்தை பெரியார். தமது வாழ்க்கை, சொத்து, சுகம், சுற்றம் என அனைத்தையும் தமிழ் நாட்டிற்கே அர்ப்பணித்தார். அந்தப் பகலவனின் அர்ப்பணிப்பு மிகுந்த பேரொளியில் பல நூற்றாண்டுகளாலி உறங்கிக்கிடந்த தமிழகம் மெல்ல விழித்தது. திராவிடர் தான் தமிழர், சென்னை மாகாணம் தான் திராவிடம் என்ற அக்கால வரையறுப்பின் படி திராவிடர் கழகத்தையும், திராவிட நாட்டுக் கோரிக்கையினையும் முன்னெடுத்தார் தந்தை பெரியார். மாநிலப் பிரிவினைகளுக்குப் பிறகு முற்றிலுமாக அதனைக் கைவிட்டார்.

மாற்றம் என்பதொன்றே மாறாதது என்பதை நன்குணர்ந்த தமிழரின் ஒரே தலைவரான தந்தை பெரியாரின் கனவுகள் மெலிப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து ஏற்பட வழியே இல்லை. ஏற்படின், அவரைத் தமிழராகக் கொள்ள வாலிப்பில்லை. எனவே திராவிடம் என்கிற கருத்தாக்கத்தின் வழியே, நெடுந்துயிலில் இருந்து விழித்த தமிழகம், அந்த எழுச்சியினையே அடித்தளமாக்கி அதன் மீதுதான் தமிழ்த்தேசியம் என்கிற மாளிகையினைக் கட்டி எழுப்ப வேண்டும். அந்நாளில் மகத்தான அம்மாளிகையின் திறவுகோல் என்பது "பெரியாரியம்'' என்றே பெயர் கொண்டிருக்கும் என்பதை எவரால், எவ்வாறு மறுக்க இயலும்?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...


Tamil | Penniyam | women | Lalitha | Periyar

அரசியல் அதிகாரம்

புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள்
டாக்டர் அம்பேத்கர்

அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மாநாட்டில் (நாக்பூர்) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் 8.8.1930 அன்று ஆற்றிய தலைமை உரை :

தாய்மார்களே, பெரியோர்களே!

Ambedkarஇன்றைய உங்கள் கருத்தரங்க நிகழ்வுக்குத் தலைமை வகிக்குமாறு என்னை அழைத்துப் பெருமைப்படுத்தியதற்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கையை நான் பெரிதும் மதிக்கிறேன். அதே வேளை என் மீது அன்பு கூர்ந்து நீங்கள் தந்திருக்கும் தகுதியையும் அதன் பொறுப்பையும் ஏற்றுச் செயல்படுவது, இயல்புக்கு மீறிய கடுமையான பொறுப்பு எனினும், இதனைத் தவிர்ப்பது அறிவுடைமையன்று என்பதை உணர்ந்து, இப்பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்...

2. இந்திய அரசியல் அரங்கில் இன்று பெருமளவில் எழுப்பப்பட்டு வரும் கேள்வி – "ஒன்றுபட்ட தன்னாட்சி பெற்ற சமூகமாக மாற, இந்திய மக்களால் இயலுமா?' என்பதுதான். இந்திய நாட்டு மக்களின் சிந்தையில் மட்டுமின்றி, பிரிட்டிஷ் பேரரசின் சிந்தையிலும், உலகின் பிற மக்கள் அனைவரின் சிந்தையிலும் பெரிதும் கலக்கம் விளைவித்துக் கொண்டிருக்கும் இக்கேள்வி குறித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணோட்டம் என்ன என்பதை வரையறுப்பதற்காகவே நாம் இங்கே கூடியுள்ளோம். இந்த நாட்டின் வருங்காலத்தைப் பற்றி எடுக்கப்படும் எந்த இறுதி முடிவிலும், இன்று நாம் எடுக்கவிருக்கும் முடிவு முக்கியப் பங்கினை வகிக்கும். இந்திய விடுதலை எனும் குறிக்கோளை அடைவதை விரைவுபடுத்துவதாகவோ, சீர்கேடு செய்வதாகவோ அமையக்கூடிய ஆற்றல் – நாம் எடுக்கப் போகும் முடிவுக்கு உண்டு.

எனவே இந்த கேள்விக்கு விடை அளிக்கும் பொறுப்பில் நாம் அக்கறையின்றி செயல்படக்கூடாது என்பதைத் தெளிவாக உணர வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகளின் நன்மை தீமைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தே செயல்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவு மற்றவர்களின் முடிவுகளிலிருந்து மாறுபட்டிருக்குமோ என அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் நமது முடிவுகள் விடுதலை சிந்தனை, நேர்மையான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

3. இந்தப் பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்திய மக்கள் தனித்தன்மை கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இனங்களைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் பின்பற்றும் பல்வேறு மதங்களின் கோட்பாடுகள் – பகைமை ரீதியில் வேறுபட்டும் முரண்பட்டும் விளங்குபவை என்றும், பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்கள் என்றும், ஒற்றுமையில்லாத பாரபட்சங்கள் பல கொண்டவர்கள் என்றும், முரண்படும் சமூக வழக்கங்கள் பல கொண்டவர்கள் என்றும், ஒருவருக்கொருவர் எதிரான பொருளியல் நலன்களைக் கொண்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டதொரு பெரும் மக்கள் திரள், எவ்வாறு தன்னாட்சி நடத்தும் சமூகமாக விளங்க முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது.

இவையெல்லாம் நடைமுறை உண்மைகள். இந்தியாவின் தன்னாட்சி மீது இந்த உண்மை நிலைகள் செலுத்தக்கூடிய தாக்கத்தை அறிவுடைய மனிதர் எவரும் புறக்கணித்து விட முடியாது. இந்த நடைமுறை உண்மை நிலவரங்களை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர முடியும்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் பெரியோர்களே! இதைப் பற்றிய உங்கள் முடிவான கருத்துக்களை நீங்கள் வெளியிடத் தொடங்குவதற்கு முன்பு இவை போன்றே வேறு பல நடைமுறை உண்மை நிலைகள் சிலவற்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். லட்வியா, ருமேனியா, லிதுவேனியா, யுகோஸ்லோவேகியா, எஸ்தோனியா மற்றும் செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் நிலைமை குறித்து எண்ணிப் பாருங்கள். இவையெல்லாம் உலகெங்கும் தன்னாட்சிக் கோட்பாட்டை நிறுவுவதை நோக்கமாகக் கூறிக் கொண்டு, 1914 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தப்பட்ட முதலாம் உலகப் பெரும் போரின் முடிவுக்குப் பின்னர் உருவாகிய புதிய நாடுகளாகும். புதிதாக அமைக்கப்பட்ட இந்நாடுகள் அனைத்தும் விடுதலையையும் இறைமையையும் கொண்ட தன்னாட்சி நாடுகளாகும். ஒவ்வொன்றும் தனது உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் முழுமையான இறைமை பெற்ற நாடுகளே.

இந்த நாடுகளில் உள்நாட்டு சமூக நிலைமைகள் என்ன? அங்குள்ள நிலைமைகள் இந்திய நிலைமைகளைப் போன்றில்லாமல், அதைவிட சீர்கேடானவை என்பதை நீங்கள் அறிய வியப்படையலாம். லாட்வியாவில், லாட் மக்களுடன் ரஷ்யர்கள், செருமானியர்கள், யூதர்கள் அன்றி மற்றும் பல்வேறு தேசிய இனத்தவரும் வாழ்கின்றனர். லிதுவேனியாவில் லிதுவேனியர்களுடன் யூதர்கள், போலந்தியர்கள், ரஷ்யர்கள் ஆகியோருடன் வேறு பல சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். யுகோஸ்லோவேகியாவில் செர்பியர்கள், குரோசியர்கள், சுலோவேனியர்கள், ருமேனியர்கள், அங்கேரியர்கள், அல்பேனியர்கள், ஜெர்மானியர்கள், மேகயர்கள், மற்றும் பல இனத்தவரும் வாழ்கின்றனர். அங்கேரியில் மேயர்கள், செருமானியர்க்ள, சுலேவியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். மொழியால், இனத்தால் ஒன்றுக்கொன்று வேறுபட்டும் முரண்பட்டும், உள் நாட்டிலேயே போராடும் குழுக்கள் பலவற்றைக் கொண்டவை இந்நாடுகள்.

இத்தகைய பல்வகை வேறுபாட்டினை இணைக்க மத ரீதியான பாலமும்கூட அங்கெல்லாம் கிடையாது. ரோமன் கத்தோலிக்கர்கள், கிரேக்க கத்தோலிக்கர்கள், செக்கோஸ்லவேகிய கத்தோலிக்கர்கள் போன்று – கத்தோலிக்கர்களிலேயே நான்கைந்து பிரிவினர் இருப்பதுடன், எவாஞ்சலியர்கள், யூதர்கள், புராடஸ்டண்டுகள் ஆகியோருடன் வேறு பல சிறு மத குழுக்களும் காணப்படுகின்றன. இவை குறித்து சற்று எண்ணிப் பாருங்கள். இந்நாடுகளில் நிலவும் பரந்துபட்ட, பிளவுபட்ட பல்வேறு பாகுபாட்டு நிலைமைகளை விடவா இந்திய நிலைமை திகைக்க வைப்பதாக இருக்கிறது? இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

இந்தியாவைப் பற்றிய முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், பல்வேறு நாட்டு நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்த்து தன்னிச்சையான, நேர்மையான முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆகவே பெரியோர்களே! இனம், மதம், மொழி, பண்பாடு ஆகிய பல்வேறு வகையாலும்; பாகுபாடற்ற பல்வேறு வகை மக்களைக் கொண்ட லாட்வியா, லிதுவேனியா, யுகோஸ்லேவியா, எஸ்தோனியா, செக்கோஸ்லவேகியா, அங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளில் மக்கள் ஒன்றுபட்டு தமது நாட்டில் தன்னாட்சி சமூகங்களாய் விளங்க முடியும் என்னும் போது, இந்தியர்களால் ஏன் இயலாது என எண்ணிப் பாருங்கள். இயலாதென்பதற்கான காரணங்கள் எதையும் என்னால் காண இயலவில்லை. அப்படிக் காரணங்கள் கூற இயலும் எனக் கருதும் நண்பர்கள் இருப்பின், அவர்கள் கூறும் காரணங்களைக் கேட்டறிய விரும்புகிறேன்.

4. இத்தகைய பன்முக வேறுபாட்டுக் கூறுகள் அனைத்தையும் சீரான ஒரே கூறாக ஒன்றிணைத்த பிறகுதான் தன்னாட்சி நிலையைப் பெறத்தக்க சமூகம் உருவாக முடியும் என்று கருதுவது, தன்னாட்சி முறையே வேற்றுமைக் கூறுகளை ஒன்றிணைத்துப் பிணைக்கவல்ல ஆற்றல் கொண்டதென்பதை மறந்து, குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுதல் போன்ற எண்ணப் போக்காகும் என்று எனக்குத் தோன்றுகிறது. தமது எல்லைக்குள் ஒரே மொழியால், ஒரே மதத்தால், ஒரே பண்பாட்டால் ஒன்றுபட்ட சீரான மக்கள் குழுமத்தைப் பெற்றிருப்பது, மிகச் சில நாடுகளுக்கே வாய்த்துள்ள அரியதோர் நிலையாகும். ஆனால் வரலாற்று, புவியியல், அரசியல் காரணங்களால், மொழியால், மதத்தால், பண்பாட்டால் வேறுபடும் மக்கள் குழுக்களே பெரும்பாலான நாடுகளில் காணப்படுகின்றன. அங்கெல்லாம் இவ்வேறுபாடுகள் காலத்தால் ஒன்றோடொன்று கலப்புற்று உள்ளன.

சீரான மக்கள் குழுமம் எனும் அளவுகோலை இம்மக்களின் பால் நீட்டியிருந்தால், அவர்களெல்லாம் இன்றைக்குத் தமது வாழ்க்கை வழியாக்கிக் கொண்டிருக்கும் தன்னாட்சி முறை எனும் திட்டத்தின் கீழ் வந்திருக்கவே முடியாது. மேலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால், தங்கள் பழைய நிலைகளில் உதிரிகளாய்ப் பிரிந்து வேறுபட்டிருந்த தனிக் குழுக்களை எல்லாம் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தன்னாட்சி அரசமைப்புச் சட்டமல்லவா ஜெர்மன் மக்களையெல்லாம் ஒன்றாக இணைத்தது? 1870 ஆம் ஆண்டுக்கு முன்னர் பவேரியர்கள், பிரஷ்யர்கள், சாக்சானியர்கள் எனத் தனித்தனிக் குழுக்களாக, இனங்களாக, நாடுகளாக இருந்த மக்களைப் பொது அரசின் கீழ் கொண்டு வராமல் ஒன்றிணைத்திருக்க முடியுமா?

பலவகையாலும் வேறுபட்ட மக்களை, ஒரு தேசிய இனமாக ஒன்றிணைப்பதற்கான ஒப்பற்ற கருவி, பொது அரசாங்கம் ஒன்றுதான். இதை விளங்கிக் கொள்வதற்கு ஜெர்மனியைத்தான் எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமென்பதில்லை. இந்திய நாடே இதை மெய்ப்பிப்பதற்கானதோர் சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? இத்துணை வேறுபாடுகளும் பாகுபாடுகளும் நிறைந்த இந்தியாவில், ஒரே நாட்டினர் எனும் உணர்வு நிலவுகிறது எனில், பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியதிலிருந்து இப்பரப்பு முழுவதும் – ஒரே பொது ஆட்சியின் கீழ் இருப்பதுதான் காரணம் என்பதை ஏற்கத்தான் வேண்டும். எனவே வரலாற்று நோக்கிலும், காரண காரியவியல் நோக்கிலும், மக்கள் நிலைமைகள், அவற்றில் நிலவும் வேறுபாடுகள் இந்தியா தன்னாட்சி பெறுவதற்குத் தடையாக இருப்பதாக எவரும் கருதவியலாது என்றே எனக்குத் தோன்றுகிறது. சொல்லப் போனால், இந்தியா ஒன்றுபட்ட நாடாக வேண்டும் என்பதே நமது குறிக்கோள் எனில், அதை அடைவதற்குரிய வலிமை வாய்ந்த கருவி தன்னாட்சி அரசே என்பதைத் துணிந்து கூறுவேன்.

5. மக்களிடையேயும், நிலைமைகளிடை÷யயும் காணப்படும் வேறுபாடுகளால் எந்தப் பின்னடைவுகளும் கிடையாதா என்று நீங்கள் கேட்பீர்கள் என்பதில் அய்யமில்லை. தன்னாட்சி கொண்ட இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, இவற்றை எல்லாம் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லையா? எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று சிறிதும் தயக்கமின்றிக் கூறுவேன். மக்களிடையிலும், நிலைமைகளிலும் இந்த வேறுபாடுகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, தன்னாட்சி இந்தியாவுக்கு வரம்புகளோ, கட்டுப்பாடுகளோ ஏதும் இல்லாத அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று கூறுவது, இன்றைய சராசரி காங்கிரஸ் அரசியல்வாதிகளின் போக்காக இருக்கிறது.

நாட்டின் சமூக நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ், அரசியல் அதிகார மய்யம் எவரிடம் இருக்கும் என்பதை படித்த பெருமக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சிறுபான்மை இன மக்களிடையே அது இருக்குமென்றா எண்ணுகிறீர்கள்? இந்திய சமூகத்தின் நடைமுறை நிலைமைகளைப் புறக்கணித்துவிட்டு அமைக்கப்படும் தன்னாட்சி அரசாங்கத்தில் அரசியல் அதிகாரத்தின் பிடிகள், அனைத்து வசதியும் பெற்று கல்வியில் சிறந்து விளங்கும் முன்னணி சாதிகளைச் சேர்ந்த மேல்தட்டு மக்களின் கைகளில்தான் போய்ச் சேரும் என்பதை நான் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். அதாவது, செல்வத்திலும், கல்வியிலும், சமூகத் தகுதியிலும், அரச போகத்திலும் திளைத்துக் கொண்டிருப்போர் கைகளில்தான் போய்ச் சேரும்.

அரசியலில் ஆகட்டும்; பிற துறைகளிலாகட்டும்; வல்லவர்களுக்கே வெற்றி என்பது தேற்றம். மேல்தட்டினருக்குக் கல்வியாலும் செல்வத்தாலும் பெற்ற வளங்கள் துணை நிற்கும். ஆனால் சிறுபான்மை மற்றும் நலிவடைந்த சமூக மக்கள், மேல்தட்டு மக்களின் இந்தவொரு வளத்திற்கு எதிராக மட்டுமே போராட வேண்டியிருக்குமென்று எண்ண வேண்டாம். செயல்பாட்டில் மிக நுட்பமானதாயினும் உண்மையான கூறு மற்றொன்று உண்டு. அதுதான் அவர்களது நிலைத்த சமூகப் பிடிப்பு. இந்த உறுதியான பிடிப்பில் தகுதிக்கோ, திறமைக்கோ சற்றும் இடமில்லை. இந்திய மக்கள் – உறவு மற்றும் குழுப்பற்று மிக்கவர்கள். தமது உறவோ, குழுவோ அல்லாத மனிதர்களிடையே பாரபட்ச உணர்வு காட்டி ஒதுக்கும் தன்மை மிகுந்தவர்கள். பெரும்பான்மைச் சமூக மக்களிடையே இந்தப் பாகுபாட்டுணர்வு ஆழமாக வேரூன்றி செயல்படும் நிலையில், சிறிய சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு இது கடும் பின்னடைவாகவே விளங்கி, அரசியல் அதிகாரம் எதையும் அவர்களுக்கு எட்டாக் கனியாக்கிவிடும்.

இந்த மனப்பான்மையின் செயல்விளைவு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பெருந்தீங்காகவே முடியும். மத அடிப்படையில் அமைந்த இந்திய சாதி அமைப்பு, ஏணிப்படிகளைப் போன்று வரிசையான பல தர நிலைகளைக் கொண்டது என்பதையும், ஏணியின் படிகளில் மேலே இருப்பவர்களுக்கு மிகுந்த மதிப்பும், கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இழிவும் காணப்படும் நிலையையும் நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். இந்தப்படி நிலைஅமைப்பு முறையின் விளைவாக கீழ் படியில் உள்ள மக்கள், தமக்கு மேல்படிகளில் உள்ளவர்கள்பால் மரியாதை செலுத்தி முன்னுரிமை அளிப்பதையும், கீழ் படிளில் உள்ளவர்களை இழிவுபடுத்தி புறக்கணிப்பதையும் வழக்கமாக்கி வைத்துள்ளது.

இத்தகைய உளவியல் செயல்பாடு, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தின் போராட்டத்திற்குப் பேரழிவாய் முடிந்து விடும். இந்த நிலையில் தீண்டத்தகாத மக்களுக்கு ஆதரவாக ஒற்றை வாக்குகூட அளிக்காமல், தீண்டப்படும் மக்களே தீண்டத்தகாத மக்களின் வாக்குகளில் பெரும் பகுதியைப் பெற்றுவிட முடியும். இவ்வாறாக, தீண்டத்தகாத மக்கள் தங்கள் போராட்டத்தில் தோல்வியைப் பெற நேர்வதுடன், தம்மையறியாமலே தமது எதிரிகளின் வெற்றிக்குத் துணை போகவும் நேரிடும். எனவே, நடைமுறை சமூக நிலைமைகளைப் புறக்கணிப்பதன் விளைவு – செல்வம், கல்வி, சமூக நிலை ஆகியவற்றால் மேம்பட்டு நிற்கும் மேல் சாதி மக்களிடம் அரசியல் அதிகாரம் முழுவதையும் அளித்து, அவர்களை ஆளும் சாதியாக ஏற்பதுதான் என்றால், நமது குறிக்கோளுக்கு ஏற்ற வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்தி அதைத் தடுப்பதே நமது கடமையாகும். நமக்கு மேல் ஆட்சி செய்பவர்கள் மாறுவது மட்டுமே நமக்கொன்றும் நிறைவு தந்துவிடாது. பிறிதொரு நாட்டை ஆளும் தகுதி எந்தவொரு நாட்டுக்கும் கிடையாது என்ற கருத்தில் காங்கிரசாருடன் நான் ஒன்றுபடுகிறேன். ஆனால் அதோடு நின்றுவிடாமல்; அதே நியாயத்தை மேலும் விரித்து, பிறிதொரு வகுப்பை ஆளும் தகுதி எந்தவொரு வகுப்புக்கும் கிடையாது எனும் கருத்தை அவர்களிடம் அடித்துக் கூறுவதில் தயக்கம் தேவையில்லை.

அய்ரோப்பிய அதிகார வர்க்கம், இந்திய ஆளும் சாதியினர் எனும் இரு தரப்பினரையும் ஒப்பிட்டால் – செல்வம், கல்வி, உயர் சமூகத் தகுதி ஆகியவற்றின் மேம்பாட்டால் பெற்ற வலிமையின் விளைவுகளைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். இந்த இரு பிரிவினரில் இந்தியப் பொது மக்களை யார் நன்கு ஆள முடியும் என்ற கேள்விக்கு, நாட்டு மக்களின் வாழ்க்கையும் அவர்களது நிலைகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு, அவர்களது தேவைகள், முறையீடுகள் ஆகியவற்றை நன்கறிந்தவர்கள் என்ற முறையிலும், மக்கள் என்ன சிந்திக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள், எதில் அக்கறை கொள்கிறார்கள் என்பனவற்றை அறிய வல்லவர்கள் என்ற முறையிலும், தாங்களே இந்திய அரசுப் பொறுப்பை மேற்கொள்ள அதிக தகுதியுøடயவர்கள் என்று இந்திய மேல்தட்டு சாதியினர் உரிமை கொண்டாடுகின்றனர்.

அவர்கள் கூற்று உண்மையாயிருக்கலாம். ஆனால் அம்மேல் தட்டு சாதியினர், தம்மீது சுமத்தப்படும் வகுப்புப் பாரபட்சம், குழுப்பற்று, தமது உற்றார் உறவினர்களுக்கே நன்மை செய்யும் மனப்பான்மை ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துவிட முடியாது. பெரும்பாலான மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை இக்குற்றச்சாட்டுகள் உணர்த்துகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று, பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கும் இந்த உயர் வகுப்பினருக்குமிடையே நிலவும் பெருத்த இடைவெளி காரணமாக, எளிய மக்களின் தேவைகள், உணர்வுகள், விளைவுகள், குறிக்கோள்கள் ஆகியவற்றை இவர்கள் அறியவும் இயலாதவர்கள் என்றும் கூறலாம். அதற்கும் மேலாக அவ்வெளிய மக்களின் எதிர்காலக் கனவுகளுக்கு இவர்கள் பகையாகவே விளங்குவர் என்பதும் உண்மை.

இதை நான் வலியுறுத்தி ஆணித்தரமாகக் கூறுவதற்கு மற்றொரு அடிப்படைக் காரணம், மக்களாட்சியின் ஆணிவேர்க் கருத்தான சமத்துவத்தை ஏற்காத வகுப்பினரின் பிடியில் இந்தியத் தன்னாட்சி அரசை நம்பி ஒப்படைக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாகுபாட்டு உணர்வில் ஊறித் திளைத்துத் தாமே உயர்ந்தவர்கள் என்று வாழும் இவர்களிடம், எளிய பொதுமக்களின் வாழ்க்கை நலன்கள் பாதுகாப்பாக இருக்கõது. ஒவ்வொரு தனித்தனி மனிதரின் மதிப்பையும் தனியே உணர்ந்து மதித்தல், ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கைதான் உண்டு என்பதை உணர்ந்து, அவ்வாழ்க்கையில் அவர் தனது தகுதிகளுக்கேற்ப உச்ச கட்ட உயர்வை அடைய, அனைத்து வாய்ப்புகளையும் அளித்தல் ஆகியவையே நிகழ்கால மக்களாட்சி அரசின் கோட்பாடுகளாகும். இந்திய மேல்தட்டு வகுப்பு மக்களின் சிந்தையிலேõ, செயல்களிலோ, மெய்ப்பொருளியலிலோ இவ்வடிப்படைக் கோட்பாடுகள் கிஞ்சித்தும் இடம் பெறவில்லை.

மாறாக, இக்கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒரு கட்டமே இப்போதைய பிறவி என்றும், இப்பிறவியில் பெற்றிருக்கும் உயர்வு, தாழ்வுகள், முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவே என்றும், இப்பிறவியில் எத்தகைய தகுதி, திறமை, பண்புகள் கொண்டிருந்தாலும் முற்பிறவியின் வினையால் கிடைக்கப் பெற்ற சமூகப் படிநிலைபடுத்தப்பட்ட நிலையில் எவ்வித மாற்றமும் அடைந்துவிட முடியாதென்றும் அவர்கள் கூறிவரும் மூடப் பழக்கங்களுக்கும் மக்களாட்சியின் அடிப்படைகளுக்கும் தொடர்பு ஏதுமில்லை. அவர்கள் கருத்துப்படி பார்ப்பனராகப் பிறந்தவர் பார்ப்பனராகவே இருப்பார்; பறையராகப் பிறந்தவர் தொடர்ந்து பறையராகவே இருப்பார் என்பது வெற்றுப் பேச்சன்று, நடைமுறை செயல்பாட்டிலிருக்கும் நம்பிக்கை. இத்தகைய மனப்பான்மை உள்ளவர்களிடம் அரசியல் அதிகாரத்தை கொடுத்தால், கொலைகாரன் கையில் நாமே வாளையெடுத்துக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

6. இத்தகைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் நாம் வகுப்புவாதிகள் என்றும், நாட்டின் பகைவர்கள் என்றும் இரக்கமின்றிப் பழி தூற்றப்படுகிறோம். எந்தவொரு நாட்டிலும் அறிவாளி மக்களிடமே அரசியல் அதிகாரம் போய்ச் சேருதல் இயற்கை என்றும், திறமையான நிர்வாகத்துக்கு அதுவே ஏற்ற முறை என்றும் காங்கிரசார் சலிப்பின்றிக் கூறி வருகிறார்கள். வரவிருக்கும் அரசியல் அதிகாரத்தை மேல்தட்டு சாதியினரிடமே விட்டுவிடலாம் என்று நம்மிடம் பரிந்துரைப்பவர்கள், சமூகமும் அரசியலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு மனித வாழ்க்கைக் கூறுகள் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும்.

பெரியோர்களே! மனித நடத்தையைப் பற்றிய இத்தகையதொரு எந்திரமயமான சிந்தனைப் பள்ளத்தில் வீழ்ந்து விடாமல் விழிப்புடன் காத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்படிப்பட்ட பிழையான கருத்துகளிலிருந்து தப்பி சிந்திந்துப் பார்த்தõல், மனிதர்கள் ஒன்றின் மீதொன்றாய் வரிசைகளிலும் வரிசை மாற்றியும் அடுக்கி வைக்கக் கூடிய பொம்மைகள் அல்லர் என்பதை உணர முடியும். வாக்களிக்க வேண்டி வரும் மனிதர் ஒருவர் தமது நலன்கள், கருத்துக்கள், மனப்பான்மை ஆகியவற்றைச் சட்டையைக் கழற்றுவது போல கழற்றிவிட்டு, வெறும் அரசியல்வாதியாக வருவது இயலாத ஒன்று என உணர்வோம். அவன் தனது முற்றாளுமையுடன் வாழ்க்கையைப் பற்றிய சொந்தக் கண்ணோட்டத்துடன்தான் வருகிறான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேல்தட்டு மக்களின் திறமைகள் நாட்டின் பெருஞ்செல்வம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்தத் திறமைகள் மட்டுமே நாட்டின் விவகாரங்களில் மேலாதிக்கம் செய்வதற்கான உரிமை எதையும் தந்துவிடவில்லை. அவர்களது நன்னடத்தையும் இந்தத் திறமைகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதையும் பொறுத்துத்தான் இந்த உரிமையைப் பெற முடியும். அந்த வகுப்பினருக்கு நம்மை ஆளும் உரிமையைத் தருவதற்கு முன்பு திறமையைவிடப் பயனைக் குறித்தே பார்க்க வேண்டும்.

அடிசன் கூறியதை இங்கு நினைவு கூறலாம். “எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல், நல்ல திறமைகள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை (திறமைவாய்க்கப் பெறாதவர்கள்) மதித்துப் போற்றுவதைவிட, மனித சமுதாயத்திற்குப் பெருந்தீங்கு வேறெதுவும் இருக்க முடியாது. இயற்கைத் திறமைகளும் கலைகளில் தேர்ச்சியும், அவை அறவழியிலும் கண்ணியத்துடனும் பயன்படுத்தப்படும்போதுதான் மதிக்கப்பட வேண்டும்.

நம்முன் ஒருவர் உரையாடும்போதுகூட, அவரது (உரையாடல்) திறமையை மெச்சிப் போற்றத் தொடங்கு முன்பு அவரது மனப்பான்மை குறித்து நேரடியாகவோ, பிற வழியிலோ சரியான தகவல் அறிந்த பின்னரே செயல்பட வேண்டும். இல்லை எனில், நியாயமாக நாம் அருவெறுத்து ஒதுக்கத்தக்க மனிதர்களின் அழகு, சொல்திறன் ஆகியவற்றில் மயங்கி அவர்களை ஏற்றிப் போற்றுவதில் முடியும்.''

அரசியல் அதிகாரத்தைப் பெற்று அனுபவிக்கத் துடிக்கும் மேல்தட்டு வகுப்பு மக்களின் தன்மைகள், நடத்தை குறித்த ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்; அதற்கு மேல் ஏதும் கூறத் தேவையில்லை. ஆனால் இன்றும் நமது நாட்டில் தொடரும் சில இழிவான அவலங்களுக்கு இந்த மேல்தட்டு மக்கள் பொறுப்பாயிருக்கும் நிலைமை குறித்து நான் வாய்மூடி அமைதியாக இருந்து விட முடியாது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணவியலாத தீண்டாமை என்னும் தீக்கொடுமையை இந்த நாட்டில்தான் அய்ந்தாறு கோடி மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய எளிய உரிமைகள்கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

– தொடரும்

Thursday, June 18, 2009

புனரபி ஜனனம், புனரபி மரணம்..

ராணிப்பேட்டை ரங்கன்காலை 9 மணி. சென்னை மாநகரின் புற
First Published : 18 Jun 2009 01:25:00 AM IST


காலை 9 மணி. சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதி. ரயில் நிலையத்தை நோக்கி மக்கள் ஓட்டமும், நடையுமாக விரைந்து கொண்டிருந்தனர். மிகவும் முன்னேறிய நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்றவற்றில்கூட இப்படி வேலைக்கு ஓடும் சுறுசுறுப்பான மக்களை உலகம் பார்த்திராது!

அதிலும் ரயில்வே கேட் மூடியிருந்தால், ""இனி ஒரு விநாடி இங்கிருந்தால்கூட சர்வதேசப் பிரச்னை ஒன்று தீர்க்கப்படாமல் போய்விடும்'' என்ற அடக்க முடியாத ஆத்திரத்தோடு "டூ வீலர்'களையும், மனைவி மக்களையும் கம்பிக்கு அடியில் வளைத்தும் இழுத்தும் கடந்துபோகும் சாகசம் இருக்கிறதே, அப்பா -நேரில் பார்த்தால்தான் தெரியும் ""காலம் பொன் போன்றது'' என்பதை எப்படி இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்று.

இந்த நிலையில்தான், பி.டி. உஷா வேகம் இல்லை என்றாலும் நானும் அவர்களோடு சேர்ந்து புறநகர் மின்ரயில் நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். ஜில்பா தலையும் காது கடுக்கனுமாக ஒரு இளைஞன் ஏதோ கூவிக்கொண்டு எதிரில் வந்தான். ""பத்து ரூபாய்க்கு 3 ஃபவுண்டன் பேனா'' விளம்பரமாக இருக்கும் என்று அலட்சியமாகக் கருதி அவனையும் கடந்து ஓடினேன். ""ஆவடியிலே ஓ.எச். (மின்சார வயர்) அறுந்துபோச்சு, ரயில் எல்லாம் லேட்டு'' என்று அடுத்த முறை அவன் கத்தியது தெளிவாகக் காதில் விழுந்தது. ஒரே ஓவரில் 3 விக்கெட் சரிவதைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகனைப்போல அதிர்ந்து, திரும்பிப் பார்த்தேன். அவன் ""ஆமாம்'' என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டிவிட்டு விலகினான். ""அப்படியானால் இவர்கள்?'' என்ற கேள்விக்குறியுடன், எனக்கு முன்னால் ஓடினவர்களைப் பார்த்தேன். அவர்களும் எதிரில் திரும்பும் கும்பல் சொல்வதைக் கேட்டு திட்டியபடியே திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருமாக பஸ் பிடித்து சென்னை போய்ச் சேருவதற்காக நெடுஞ்சாலைக்கு விரைந்தோம். அங்கே சாலையைக் கடக்க முடியாதபடிக்கு, ஏராளமான ஷேர் ஆட்டோக்கள். "ஆவடிக்கு எவ்ளோபா?' என்று கேட்டவரிடம், "ஒரு ஆளுக்கு 15 ரூபாய்தான்' என்று முடிந்தவரை ப. சிதம்பரம் அளவுக்குப் பணிவாகப் பதில் சொன்னான் ஆட்டோக்காரன். "நீங்க நாசமாப் போக' என்று அவர்களை வாழ்த்தியபடியே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் தோளில் ஒரு பை, கையில் ஒரு பை என்று (ஒன்றில் டிஃபன், ஒன்றில் சாப்பாடு) சுமையோடு பஸ் நிலையம் நோக்கி ஓடினார்.

எம்.டி.எச். சாலையில் எந்த வாகனமும் சமனமாக நிற்க முடியாத சாய்வான மேட்டுப் பகுதிதான் எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்ட். (ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது). அங்கு நிற்கும்போதே பல பெரியவர்கள் தலைசுற்றி விழுந்து "ஸ்ட்ரோக் வார்டு' போயிருக்கிறார்கள். அந்த இடத்தை அடைந்தபோது பஸ் போய்விட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டை ஒட்டிய "டிரைவ்-இன்' டீக்கடைக்காரரை எல்லோரும் பார்த்து, "அடுத்த பஸ் எப்போது வரும்?' என்று கோரஸôகக் கேட்டனர். தாற்காலிகமாக எம்.டி.சி. டைம்கீப்பர் பொறுப்பையும் கெüரவமாக ஏற்ற அவர், "எப்ப வரும்னு யாரால சொல்ல முடியும்?' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எம்.டி.சி. டைம் கீப்பராக இருந்தால் இதையே "சொள்'ளென்று எரிந்து விழுந்தபடியே சொல்லியிருப்பார். (அதற்குத்தான் அவருக்கு சம்பளம் தரப்படுகிறது.) இவர் பாவம் கெüரவ கீப்பர்தானே, சிரித்தார். கேட்டவர்களோ காரணம் இல்லாமல் அவர் மீது எரிந்து விழுந்தனர். "எப்ப வரும்னு தெரிஞ்சா சொல்லுங்க, இந்த பதில் எங்களுக்குத் தெரியாதா?' என்றனர்.

திடீரென எல்லோரும் மெüனமாகி சில விநாடிகள் சும்மா இருந்துவிட்டு மீண்டும் உரத்த குரலில் பேச ஆரம்பித்தனர். அதற்குள் கூட்டமும் அதிகமானது.

"சி.எல்.லாம் எடுத்துட்டேன் சரஸ்வதி, இல்லன்னா இன்னிக்கு லீவு போட்டிருப்பேன்' என்று பாதி அழுகையும், பாதி ஆத்திரமுமாக மின்வாரிய ஊழியை ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தாள். "உங்க நாத்தனாருதான் ஸ்கூட்டி வெச்சிருக்காளே, அவளுக்கு "செல்' பண்ணி வரச்சொல்லி போலாமில்லையா?' என்று சேதுசமுத்திர திட்டத்துக்கு மாற்று வழி கண்டுபிடித்ததைப்போல சொன்னாள் அவளுடைய தோழி.

"ஐயே, அந்த குரங்கோடயா? எவ போவா அந்த லூúஸôட?' என்று தன்னுடைய கணவனுடைய தங்கையை அந்த இக்கட்டிலும் வாயாரப் புகழ்ந்தாள் அந்த பெண் அரசு ஊழியர்.

"ரயில் ஓடாதுன்னா ஷேர் ஆட்டோக்காரனுக்கு மூக்குலே வேர்க்குது வர்றான், எம்.டி.சி. நிர்வாகம் எருமை மாட்டு முதுகிலே மழை பெய்ஞ்சாப்ல இருக்குதே சார்' என்று அங்கலாய்த்தார் தலைமைச் செயலகப் பிரிவு அதிகாரி ஒருவர். அரசு வேலை கிடைக்காத ஆத்திரத்தில், எப்போதும் அவரைக் காலை வாருவதையே உப தொழிலாகக் கொண்டிருந்த அவருடைய நண்பர், "ஆமா, நீங்க எப்பவும் ஜனங்க கஷ்டத்தைப் பார்த்துத்தான் உடனே உடனே காரியம் பண்ணி கிழிக்கிறீங்க, எம்.டி.சி.யைக் குறை சொல்ல வந்துட்டீங்க' என்று எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார்.

"இங்க பாரு, புரியாம பேசாத; எங்க செக்ஷன்ல ஆபிசரு வரலைன்னா நானே தபாலெல்லாம் பிரிச்சு பார்த்து, யார் யார் கிட்டே சேர்க்கணுமோ கரெக்டா சேர்த்துட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பேன்' என்று ""அரசு நிர்வாக ரகசியத்தை'' ஓரளவுக்குக் கசியவிட்டார் அவர்.

பொதுப்பணித்துறையில் எஸ்.ஓ.வாக இருக்கும் ஒரு அதிகாரி, ""முக்கியமான ஃபைல் ஒண்ணு கையெழுத்துக்கு வெக்கணும் இல்லைன்னா, நான் லீவு போட்டுடுவேன்'' என்று மின்வாரிய அம்மாவைப் பார்த்துக் கூறினார். (அவர் கூறியபடி அது ஃபைல் அல்ல, ஒரு காண்ட்ராக்டர் என்று அவருடைய மனசாட்சி குத்திக்காட்டியது).

"ரயில் ஓட ஆரம்பிச்சிடுச்சாம், கால் அவர்ல எல்லாம் சரியாயிடும்' என்று "செல்' பேசிக்கொண்டிருந்த ஒரு "அரை டிக்கெட்' கூறியதும், மூட்டுவலி, குதிகால் நோவு எல்லாவற்றையும் மறந்து எல்லோரும் மீண்டும் ரயில் நிலையம் நோக்கி ஓட ஆரம்பித்தோம்.

எங்கிருந்தோ கேசட் ஓங்கி ஒலித்தது, ""புனரபி ஜனனம், புனரபி மரணம்...''
dinamani.com/

கலை புகைப்பட ஆல்பங்கள்


கலை .................. புகைப்பட ஆல்பங்கள்