
!
""தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ லட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எனது போராட்ட லட்சியம் மாறப் போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்''. எம் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரை


யில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றியும் ஐந்து தடவை அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
க்குத் திரும்பி வருவேன் என்றோ நான் எண்ணி இருக்கவே இல்லை. முகாமில் இருக்கும்போது கூட அப்படி எண்ணவில்லை என்கிறார் தமிழ்வாணி.சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் 15 கேள்வி- பதில்கள் அடங்கிய விளக்க அறிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன் இரண்டாம் பாகம் இது.
5. நாடு கடந்த அரசு அமைக்கும் முயற்சியைப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் ஏன் முன்னெடுக்க வேண்டும்?. அவர்களுக்குத் தமிழீழ அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?.
இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழர் மட்டுமே தமிழீழத் தமிழரது அரசியல் வேட்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். இது ஈழத் தமிழருக்கு வலுச்சேர்க்கின்ற காரணியகவே உள்ளது. 21ம் நூற்றாண்டின் அரசியல் உண்மைநிலை நாடுகடந்த அரசியலாகவே உருமலர்ச்சி பெற்று வருகிறது.
புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற அயர்லாந்து மக்கள் வடஅயர்லாந்து மக்கள் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவை வழங்கினர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்நாள் வரை இஸ்ரேல் நாட்டை அரசியல் மட்டத்திலும் பொருளியல் அடிப்படையிலும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னுமொரு தளத்தில் இத்தாலி, எல் சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா முதலிய நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களைத் தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக உறுப்பாக ஏற்றுள்ளன.
இத்தாலிய நாடாளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த இத்தாலிய மக்கள் நான்கு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக கெயிட்டியில் ஒரு தனித் தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்குக் கிடைத்துள்ள முதன்மைக்குச் சான்று பகர்கின்றன. இப்பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் நோக்க வேண்டும்.
தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து குடியேறினர். இன்னொரு பகுதி மக்கள் வடகிழக்குக்கு வெளியே இடம் பெயரக் கட்டாயப்படுத்தப் பட்டனர். எஞ்சியோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளுரில் பொருளியலில் திக்கற்றவர்களாகவும் அரசியல் அடிமைகளாகவும் சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டனர்.
எனவே தாயகத்தில் ஈழத் தமிழர் தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான பேராட்டங்களை முன்னெடுப்பது புலம்பெயர் தமிழரது உரிமையும் கடமையுமாகும்.
6. நாடு கடந்த தமிழீழ அரசு எங்கே அமையும்?.அதன் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?
அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசுக்கு ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு நாட்டின் நிலப்பரப்பினைத் தளமாகக் கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற முறைமையான அரசுச் செயற்பாடுகள் மூலம் தனது இறையாண்மையை நிலைநாட்டவோ தேவை ஏற்படாது.
தாயகத்தில் வாழும் மக்களது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருண்மிய, பண்பாட்டுச் செழுமை ஆகியவற்றைத் தனது முதன்மைக் குறிக்கோள்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படும். மேலும், புலம்பெயர் ஈழத் தமிழர் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு இசைவாகப் தம்மைப் வலுவுள்ள ஒரு சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கும் அதனூடாக அவர்களால் அடையக்கூடிய சமூக, பொருண்மிய, அரசியல் மேல் நிலையினைத் தாயக விடுதலைக்கான உந்து சக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இவ்வரசு முன்னெடுக்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினைத் தனது ஆள்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களை அடைய செயலணிகளையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களையும் உலகளாவிய மட்டத்தில் பல்வேறு நாடுகளில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு அமைய உருவாக்கிச் செயற்படுத்தும்.
7. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகள் ஒப்புதல் அளிக்குமா?. அவற்றின் ஒப்புதலின்றி அதன் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?
முன்னரே குறிப்பிட்டது போல் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஒரு புதிய முயற்சியாகும். இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது நாட்டுக்கு வெளியே புகலிட அரசுகளை உருவாக்கிச் செயற்பட்டன.
புகலிட அரசுகள் இயங்குவதற்கு வலுவான புலம்பெயர் சமூகம் தேவையாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் வலுவான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு. அதேவேளை ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஈழத் தமிழரது அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தும் அனைத்துலக நாடுகளினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான வற்புறுத்தல் எமக்கு மிகச் சாதகமான காரணிகளாக உள்ளன.
8. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய எண்ணக்கருவை தமிழீழ விடுதலைப் புலிகளது அதைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டமாகக் கொள்ள முடியுமா?.
ஈழத் தமிழர் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கட்டங்களையும் அணுகுமுறை மாற்றங்களையும் தாண்டி வந்துள்ளது. இக் காலகட்டத்தில் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைகளும் மாற்றம் பெற்றன.
வரலாற்றின் இயங்கியல் தன்மையானது ஈழத் தமிழர் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே இது வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய நிலைமையையும் நோக்க வேண்டியுள்ளது.
2000ம் ஆண்டுகளின் பிற் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஸ்ரீலங்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட ராணுவ மேலாண்மையால் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இங்கு வலுவிழக்கச் செய்யப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டமல்ல. ‘செப்டம்பர் 11’ எனக் குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கருத்தியலை ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர் போரின்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மனிதாபினமான சட்டங்களுக்கும் மனித நாகரீகங்களுக்கும் முற்றிலும் புறம்பாக ஒரு போரைத் ஈழத் தமிழர் மீதும் அவர்கள் தாயகத்தின் மீதும் திணித்து 21ம் நூற்றாண்டின் பெருங்கேடான இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளனர்.
இச்சூழ்நிலையில் ஈழத் தமிழரது தாயக விடுதலைக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக் கடமை தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இம்முதன்மையான பங்களிப்பை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்மொழிந்தார்.
இன்றைய சூழலில் புதிய உலக அரசியல் ஒழுங்கைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக நாடுகளின் புவிசார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக பொருத்தமான புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஈழத்தமிழரது தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கருத்தினை விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளித்ததன் மூலம் தமது வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படும். இது மேலிருந்து திணிக்கப்படும் அரசாக இருக்காது. முற்றாகக் கீழிருந்து மேல்நோக்கி கட்டியெழுப்பப்படுகின்ற ஒரு மக்களாட்சி அரசாக இருக்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசு வெளிப்படைத்தன்மையும் பொறுப்புத்தன்மையும் கொண்டதாக வடிவமைக்கப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை ஊக்குவித்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை ஒளிவுமறைவின்றி வழங்கும். மக்களாட்சி செயல்முறையூடாகப் புலம்பெயர் தமிழரால் தெரிவு செய்யப்படும் பேராளர்களால் இது ஆளப்படும். இவ்வரசு செயற்படவுள்ள முறைமை தொடர்பான கூடுதல் விளக்கங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.
(தொடரும்..)
சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் 15 கேள்வி- பதில்கள் அடங்கிய விளக்க அறிக்கையை விடுதலைப் புலிகள்
அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விவரம்:
நாடு கடந்த தமிழீழ அரசுத் திட்டம் அறிவிக்கப்படட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.
இப்போது வெளியிடப்படும் இந்த விளக்கம் நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்துப்பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணைபுரியும் என்று நம்புகிறோம்.
இந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விஷயங்களே. இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி; அதற்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்து திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்.
இத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு:
1.நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன?
நாடு கடந்த தமிழீழ அரசு தமிழ் மக்களதுஅரசியல்வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின்விடுதலைினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.
தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமதுஅரசியல்வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. இலங்கை அரசு சட்ட அடிப்படையான தடைகள், ராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களதுவிடுதலைவேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக பாடுபடும் அதியுயர்அரசியல்நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படுகிறது. தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசில் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.
2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?
ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின்அரசியல் பண்பாடு, பொருளாதாரம்
, வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமானஅரசியல்கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977ம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையின்அரசியல்கட்டமைப்பு தொடர்ச்சியாக ராணுவ மயப்படுத்தப்பட்டு இப்பொழுது மேலும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள- பௌத்த வல்லாண்மை சமூகத்தினால் இயற்றப்பட்ட அரசியலமைப்பும் சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின்; அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளன. இவை தமிழ் மக்களதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய சமூகங்களதும்; அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் மற்றும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைக்கற்களாக இருக்கின்றன.
அத்துடன் தமிழ் மக்கள் தங்கள்அரசியல்வேட்கையைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் அதற்காகக் குரலெழுப்பிப் போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் பேரச்சுறுத்தலாகவும் உள்ளன.
தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழரும் அடிமைகளாகவும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளிற் கைதிகளாகவும் வாழ கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேவேளை சிங்கள அரசுத் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அரசதந்திரிகளும் படைத் தளபதிகளும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித சிக்கலும் இல்லை என்றும்அரசியல்தீர்வு தேவையற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக நாடுகள் மட்டத்திலும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் எதிர்கொண்டு தமிழ்மக்களதுஅரசியல்தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை பல்வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்டு முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழ்மக்களது கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையைப் பெற்றதுமான ஒரு மக்களாட்சிக் கட்டமைப்பின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடுகடந்த தமிழீழ அரசு எனத் இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ளது.
3. நாடு கடந்த அரசுக்கும் புகலிட அரசுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றேதானா?
இவ்விரண்டு அரசுகளுக்கும் இடையே பல பொதுப் பண்புகள் இருந்தாலும் கோட்பாட்டு அடிப்படையில் அவை வேறானவை.
புகலிட அரசு என்பது வெளிநாடுகளுக்கு தப்பியோடும்அரசியல்தலைவர்கள் தமக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு அமைக்கும் ஓர் அரசாகும். சொந்த நாடுவிடுதலைபெறும் பொழுது அவர்கள் நாடு திரும்புவர். புகலிட அரசை அமைக்க குறைந்தளவு ஒரு நாட்டின் ஒப்புதலும் ஏற்புதலும் தேவை. புகலிட அரசு செயற்படுவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய தேவையில்லை.
நாடு கடந்த அரசு பற்றிய கோட்பாடு கடந்த இரு பத்தாண்டுகளாக சமூக அறிஞர்களது கவனத்தை ஈர்த்து வருகிறது. அது புலம் பெயர்ந்து வாழும் மக்களது நாடு கடந்த வாழ்க்கை முறையோடும் நாடு கடந்த அரசியலோடும் தொடர்புள்ளது.
புலம் பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் மட்டும் அல்லாது தமது தாயகத்தோடும் வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தம் மக்களோடும் உறவைப் பேணி வருகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வை இவர்கள் அமைத்துக் கொண்டபொழுதும் இவர்களதுஅரசியல்சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு பண்புகளைத் முடிவு செய்வதில் நாடு கடந்த சமூக வெளி முதன்மையான பங்கினை வகிக்கிறது. ஈழத் தமிழரது புலம் பெயர் வாழ்க்கையும் இவ்வாறே உள்ளது.
புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் நாடுகடந்த தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் உள்ளனர். எனவே அம்மக்களும் ஈழத்தமிழரது நாடு கடந்த சமூக வெளியின் உறுப்பாகவே உள்ளனர். ஈழத் தமிழரதுஅரசியல்இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. அவர்களது அரசியல் இப்பொழுது நாடு கடந்த அரசியலாகவும் மாற்றம் கண்டுள்ளது. பன்முகப்பட்டதும் சமூகநலன்மிக்கதும் மக்களாட்சி அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதுமான தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும்.
அமைக்கப்பட இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களதுஅரசியல்வேட்கைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. மேலும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டையும் இந்நாடு கடந்த அரசு அதன் ஆளுகைக்குள் கொள்ளும்.
மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ்வரசு அமைக்கப்படுவதால் இதற்கு நாடுகளின் ஒப்புதல் என்பது ஒரு முன் தேவையாக இருக்காது. தமிழ் மக்களிடையே உள்ள பொது அமைப்புகள் இவ்வரசினைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியச் சிக்கலுக்குஅரசியல்தீர்வுகாண்பதற்கு அனைத்துலக நாடுகளினதும் மக்களினதும் ஆதரவை இவ்வரசு திரட்டும். மேலும் இவ் அரசு தமிழீழ நாட்டின் விடுதலை
க்காகஅரசியல்மற்றும் அரசதந்திர வழிமுறைகள் ஊடாகப் போராடும்.
4. நாடு கடந்த அரசு உருவாகிவிட்டதா? இல்லையெனில் அது எவ்வாறு உருவாக்கப்படும்? நாடு கடந்த அரசை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?
நாடு கடந்த அரசு இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான நிறைவேற்றுச் செயற்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிறைவேற்றுச் செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான திரு ருத்ரகுமாரனின் பெயர் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த அரசை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் தோறும் உருவாக்கும் பணிகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளோரை இப்பொழுது இணைத்து வருகிறோம். விரைவில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய செயற்குழு பற்றிய விளக்கங்களை அறிவிப்போம். இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மதிவுரைக் குழு உருவாக்கற் செயற்குழுவுக்கு மதிவுரை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களோடும் தமிழ் மக்களோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும். தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின் அரசியல்
தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந்நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்குத் திரட்டும் செயற்பாடுகளிலும் இச்செயற்குழு ஈடுபடும். முசுலிங்கள்;, இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரைக் குழு விரிவுபடுத்தப்படும்.
தமிழரிடையே இயங்கும் மக்கள் அமைப்புக்களது துணையோடும் நன்மதிப்புப் பெற்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்தும் ஓவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத்தழிழ் மக்களது வாக்காளர் பட்டியல் ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு உருவாக்கப்பெற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அனைத்துலக நெறிமுறைகளுக்கு அமைய சுதந்திரமானதேர்தல்
குழு அமைக்கப்பட்டுத் தேர்தல்கள் நடத்தப்பட்டு நாடு கடந்த அரசுக்கான மக்கள் பேராளர்கள் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்படும் பேராளர்கள் தம்மை அரசியலமைப்பு அவையாக மாற்றிச் சட்டச் சிறப்புக் குழுவின் உதவியோடு மக்கள் அமைப்புகளின் பரிந்துரைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசு தொடர்பான யாப்பை எழுதுவர்.
(தொடரும்..)
வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.
உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றார்.
காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.